Friday, 29 December 2017

மதிப்பீடு

மதிப்பீட்டு என்பது ஒரு பொருள் தகுதி, மதிப்பு மற்றும் முக்கியத்துவம் ஆகியவற்றின் முறையான உறுதிப்பாடு ஆகும், தரநிலைகளின் தரத்தால் நிர்வகிக்கப்படும் அடிப்படைகளைப் பயன்படுத்தி. முடிவெடுப்பதில் உதவுவதற்கு எந்தவொரு நோக்கத்திற்காகவும், திருத்தியமைக்கக்கூடிய கருத்துக்கணிப்பு / முன்மொழிவு அல்லது வேறு எந்த மாற்றீட்டையும் மதிப்பீடு செய்ய ஒரு அமைப்பு, திட்டம், அல்லது வேறு எந்த தலையீடு அல்லது முன்முயற்சியால் இது உதவ முடியும்; அல்லது முடிவடைந்த எந்தவொரு நடவடிக்கையையும் நோக்கம் மற்றும் குறிக்கோள்களைப் பொறுத்து சாதனை அல்லது மதிப்பின் அளவை உறுதிப்படுத்த உதவும்.[1] மதிப்பீடுகளின் முதன்மை நோக்கம், முன்னர் அல்லது ஏற்கனவே உள்ள முன்னெடுப்புகளைப் பற்றிய நுண்ணறிவுகளைப் பெறுவதற்கு கூடுதலாக, பிரதிபலிப்பை செயலாக்க மற்றும் எதிர்கால மாற்றத்தை அடையாளம் காண உதவுவதாகும்.[2]
கலை, குற்றவியல் நீதி, அஸ்திவாரங்கள், இலாப நோக்கற்ற நிறுவனங்கள், அரசு, சுகாதாரம், மற்றும் பிற மனித சேவைகள் உட்பட பல்வேறு பரந்த மனித நிறுவனங்களில் ஆர்வமுள்ளவர்களை மதிப்பீடு செய்வதற்கும்  பெரும்பாலும் மதிப்பீடு பயன்படுகிறது. இது நீண்ட காலம் மற்றும் ஒரு காலத்தின் முடிவில் செய்யப்படுகிறது.
மேலும் காண்க தொகு
கண்காணிப்பு மற்றும் மதிப்பீடு என்பது அரசாங்கங்கள், சர்வதேச நிறுவனங்கள் மற்றும் அரசு சாரா நிறுவனங்கள் ஆகியவை நடப்பு அல்லது கடந்தகால நடவடிக்கைகளை மதிப்பிடுவதற்கான ஒரு செயல்முறையாகும்.
மதிப்பீடு பகுப்பாய்வு பகுதியாக குறிப்பிட்ட தகவலை சேகரித்து ஆய்வு பகுப்பாய்வு ஆகும்
தகுதி மதிப்பீடு ஆசிரியர்கள் தரநிலை சோதனை தவிர மற்ற வழிகளில் தங்கள் மாணவர்கள் திறனை தீர்மானிக்க ஒரு வழிமுறையாகும்
கல்வி மதிப்பீடு ஒரு கல்வி அமைப்பில் குறிப்பாக நடத்தப்படும் மதிப்பீடு ஆகும்
கில்லஸ் Deleuzeசெயல்திறன் மதிப்பீடு மனநிலை மதிப்பீடுக்கு எதிரானது.
செயல்திறன். மதிப்பீடு  என்பது மொழி சோதனை துறையில்  ஒரு சொல்லாகும். இது தகுதி மதிப்பீட்டிற்கு முரணாக உள்ளது.
நிரல் மதிப்பீடு என்பது ஒரு திட்டத்தின்யுக்திகளும், தத்துவங்களும் இணைந்த 'வேலை' ,
டொனால்ட் கிர்க்பாட்டிக் மதிப்பீடு மாதிரி பயிற்சி மதிப்பீடுக்கான மாதிாி ஆகும்

Wednesday, 20 December 2017

Tagore college of education

20.12.3017
Tagore CBSC school.deviyakuruchi.Salem DT
              பள்ளியின் சிறப்புகள்
1.மாணவர்களுக்கு புரியுமாறு தெளிவாக பாடம் நடத்தப்படுகிறது.
2.கராத்தே,சிலம்பாட்டம்,இசை,நாடகம்,என அனைத்து புது வகையான
விளையாட்டுகளும் மாணவர்களுக்கு அளிக்கப்படுகிறது.
3.மாணவர்களுக்கு கணினி முறையில் பாடம் கற்பிக்கப்படுகிறது.
4.அனைத்து பாடங்களுக்கும் தனித்தனி "ஆய்வகங்கள்" உள்ளன.
5.ஆசிரியர்கள் மாணவர்களை ஊக்குவித்தலுக்கு பின் பாடம் கற்பிக்கப் படுகிறது.
6.மாணவர்கள் நன்றாக பார்த்து கவனிக்கின்றார்கள்.
            
                                      நன்றி......

Tuesday, 19 December 2017

மைசூர்ப் போர்

மைசூர்ப் போர்

முகலாய அரசு தக்கானத்தை தன் ஆட்சியின் கீழ் கொண்டு வர நினைத்த அதே வேளையில் மைசூர் மன்னன் சிக்க தேவராயன் தனது ஆட்சியை விரிவாக்க எண்ணி மதுரையின் ஆளுகைக்குக் கீழ் இருந்த சேலம் மற்றும் கோயமுத்தூரைக் கைப்பற்றினான். 1695 -ல் திருச்சிராப்பள்ளி கோட்டையையும் முற்றுகையிட்டான். இராணி மங்கம்மாளின் படைகளால் அம்முற்றுகை முறியடிக்கப்பட்டது.

Monday, 18 December 2017

இராணி மங்கம்மாளின் ஆட்சி

இராணி மங்கம்மாளின் ஆட்சி

மங்கம்மாள் ஆட்சிப் பொறுப்பை ஏற்ற காலத்தில் போர்கள் அதிகம் நடைபெறவில்லை. இவர் அண்டையில் உள்ள அரசுகளிடம் நட்புறவையே விரும்பினார். ஆயினும் தஞ்சை மராத்தியர்கள், முகலாயர்கள், திருவாங்கூர் அரசு, போன்றவர்களால் சவாலைச் சந்திக்க வேண்டி இருந்தது. மிகத்திறமையான இராச தந்திரியாகவும் தேர்ந்த அரசியல் அறிவும் பெற்ற மங்கம்மாள் இப்பகைகளை மிகத்திறமையுடன் முறியடித்தார். ஆட்சி காலத்தில் நல்ல பல திட்டங்களைத் தீட்டி மதுரையைச் சிறப்பாக ஆண்டார்.

Sunday, 17 December 2017

இராணி மங்கம்மாள்

இராணி மங்கம்மாள் (இறப்பு: அண். 1705) பெண்கள் முடி சூட்டி ஆட்சி செய்யாத நாயக்கர் மரபில் காப்பாட்சியாளராக இருந்து மதுரையை 1689 முதல் 1704 வரை ஆண்ட பெண்மணி ஆவார். மதுரையை ஆண்ட சொக்கநாத நாயக்கரின் மனைவி ஆவார். கணவர் இறந்ததும் தன் மகன் அரங்க கிருஷ்ண முத்துவீரப்ப நாயக்கர் இளம் வயதினனாக இருந்த காரணத்தால் தான் உடன்கட்டை ஏறாமல் மகனுக்குத் துணையாக காப்பாட்சியாளராக இருந்து மதுரையைத் ஆண்டவர். திறமையான ஆட்சியாளர். சமயப் பொறை மிக்கவர். எதிர்ப்புகளைத் தன் ஆற்றலாலும் அறிவு நுட்பத்தாலும் முறியடித்தவர். 18 ஆண்டு காலம் தென்னாட்டை தனியே ஆண்ட பெண்ணரசி. இவருடைய ஆட்சி காலத்தில் மதுரைநாயக்கர்களின் தலைநகரமாக திருச்சிராப்பள்ளி விளங்கியது.

Saturday, 16 December 2017

பஞ்சபூதங்களை கட்டுப்படுத்தும் விரல்கள்

காது நன்கு கேட்க! காதில் வலி என்றால் கட்டை விரலால் நடுவிரலை மடக்கி அழுத்திக் கொண்டு உட்காரவும். நாற்பது நிமிடங்கள் இதுபோல் அமர்ந்தால் காதுவலி பறந்து போகும். காது கேளாதவர்கள் இந்த ( shunya ) ஷன்ய முத்திரையைத் தொடர்ந்து செய்து வந்தால் காது கேட்க ஆரம்பிக்கும். சுறுசுறுப்பாக வாழ பிருதிவி முத்திரை! மோதிர விரலைக் கட்டை விரல் நுனியின் மேல் வைத்துக் கொண்டு இருபது நிமிடங்கள் தியான நிலையில் அமருங்கள். அவ்வளவு தான். தேவையான ஆக்ஸிஜன் கிடைத்துவிடும். உற்சாகமும் புதுப்பிக் கப்பட்டு விடும். மதிய உணவுக்கு முன்பு இந்த முத்திரையை செய்து விட்டுச் சாப்பிட்டால் அதன் பிறகு வரும் பொழுதுகள் சுறுசுறுப்பான செயல் நிறைந்த நாளாக அமையும்

Friday, 15 December 2017

எழுத்தியல்

பவணந்தி முனிவர் எழுதிய நன்னூலின் எழுத்ததிகாரத்தின் ஐந்து பகுதிகளில் முதலாவது பகுதி எழுத்தியல் ஆகும். இதில் கடவுள் வணக்கம் எனத் தொடங்கி, எழுத்திலக்கணத்தின் 12 கூறுகள் எழுதப்பட்டுள்ளன. அவை ஒவ்வொன்றையும் விளக்கும் நூற்பாக்கள் (58-126), புறனடை நூற்பா (127) என மொத்தம் 72 நூற்பாக்கள் உள்ளன.

Thursday, 14 December 2017

நன்னூல்

நன்னூல், தொல்காப்பியத்தையும், தொல்காப்பியம் இளம்பூரணர் உரையையும் முதல்நூலாகக் கொண்ட வழிநூல். இது தொல்காப்பியம் கண்ட தமிழியலைப் பின்பற்றி நன்னூல் தோன்றிய காலத்தில் இருந்த தமிழையும் உள்ளத்தில் கொண்டு தமிழ்மொழியை ஆராய்ந்துள்ளது. சுமார் 1700 ஆண்டு கால இடைவெளிக்குப் பின்னர் நிகழ்ந்த தமிழியல் பார்வை இது என்பதைக் கருத்தில் கொள்ளவேண்டும்

Wednesday, 13 December 2017

தமிழ் இலக்கணத்தில் மாத்திரை

தமிழ்

தமிழ் இலக்கணத்தில் மாத்திரை எனப்படுவது கண் இமைக்கும் (சிமிட்டும்) நேரத்தைக் குறிக்கும் அளவாகும். எழுத்துக்கள் ஒலிக்கப்படும் கால நீட்டத்தைக் குறிக்க மாத்திரை என்னும் கால அளவு பயன்படுகின்றது. நாம் ஒரு பொருளைப் பார்த்துக்கொண்டிருக்கும்போதே கண் இயல்பாகவே மூடித் திறந்துகொள்ளும். இப்படி நம்மை அறியாமல் கண் நெடித்துக்கொள்ளும் கால அளவுதான் மாத்திரை

Tuesday, 12 December 2017

உடல் மற்றும் மன ஆரோக்கியம்

நிலம், நீர், நெருப்பு, காற்று, ஆகாயம் என் பஞ்ச பூதங்களை உள்ளடக்கியது இந்த பிரபஞ்சம். இதில் ஓர் அங்கமாக விளங்கும் நமது உடலும் இந்தப் பஞ்ச பூதங்களால் ஆனவையே. இந்த ஐந்து மூலங்களையும் உடலில் இருந்து பிரிக்க முடியாது காரணம் மனிதனின் ஐம்புலன்களும் செயல்படுவதற்கு இந்த ஐந்து மூலகங்களே காரணமாக உள்ளன. இந்த ஐந்து மூலங்களும் உடலில் சமனநிலையில் இருந்தால் நமது உடல் மற்றும் மன ஆரோக்கியம் தொடர்ந்து சிறப்பாக இருக்கும். 

Sunday, 10 December 2017

தினமும் யோகா செய்வதால் ஏற்படும் நன்மைகள்!

 யோகா என்பது பல கோணங்களில் உடலை சுருக்கி செய்யும் பயிற்சி. இதன் மூலம் மனதையும் உடலையும் இணைத்து ஆரோக்கியத்தை பெற முடியும். யோகாவின் சக்தியை பற்றி சொல்ல வார்த்தைகளே இல்லை. இதை அனுபவித்தால் தான் அதன் நன்மைகளை உணர முடியும். இரத்த அழுத்தத்தை சீராக்குதல், மன அழுத்தத்தை குறைத்தல், கொழுப்புத் தன்மையை நீக்குதல் போன்றவைகளை யோகா செய்கின்றது. உடல் எடையை குறைப்பதுடன், இந்த யோகா அழகான உடல் அமைப்பை பெறவும் உதவுகின்றது. இவை அனைத்தையும் விட யோகா மன அமைதியை முழுமையாக கொடுக்கின்றது. இதை தொடர்ச்சியாக செய்வதன் மூலம் மன அழுத்தத்தை போக்கலாம். இப்போது யோகாவை தினமும் செய்வதால் ஏற்படும் நன்மைகள் என்னவென்று பார்ப்போம்

Saturday, 9 December 2017

சமணர்களின் குகைக் கோயில்கள்

இந்தியாவில் உள்ள அஜந்தா குகை ஓவியங்களுக்கு அடுத்தாற்போல் புகழ் மிக்கது. இவ்வோவியங்கள் சமணர்களின் குகைக் கோயில்களில் எழுதப்பட்டுள்ளன.[3]
சித்தன்ன வாசல் ஏழடிப்பட்டம் மேல் கூரையில் ஓவியங்கள் இருந்தற்கான அடையாளங்களை புதுக்கோட்டை முதன்மைக் கல்வி அலுவலர் திரு.என். அருள்முருகன் அவர்கள் கண்டறிந்துள்ளார். மலையின் அனைத்து திசைகளிலும் உயிரைப் பணயம் வைத்து ஆய்வு செய்த அவர் ஏழடிப்பட்டம் மேல் பகுதியில் ஓவியங்களின் மீதப்பகுதிகளை கண்டறிந்துள்ளார்.

Friday, 8 December 2017

தாகூர் கல்விச் சிந்தனை

மகாத்மா காந்தியடிகளாலேயே ‘குருதேவர்’ என்றழைக்கப்பட்டவர் மகாகவி இரவீந்திரநாத தாகூர். தமது 31 வது வயதில் 1892 ல் ‘கல்வியில் பொருத்தமற்ற நிலை’ என்ற வெளியீட்டின் மூலம் பிரிட்டிஷ் இந்தியாவின் கல்விமுறையைக் கூர்மையான விமர்சனங்களுக்கு உட்படுத்தினார். இது வெளியான 10 ஆண்டுகளில் அவர் சாந்தி நிகேதனில் பிரமச்சரிய ஆசிரமத்தை அமைத்தார். ‘புதிய அறிவுப்பரவலும் ஏற்பும் தாய்மொழிக் கல்வியால் மேம்படும்; ஆங்கில பாணியைத் திறனற்ற முறையில் தழுவ முயன்றால் வெகு சிலருக்கு அது அரைகுறைக் கல்வியைத் தரும்’ என்பதே தாகூரின் அப்போதைய கருத்து.‘கல்லூரிக்கல்வியையும், தேசத்தின் வாழ்க்கையையும் இணைப்பது; வெறும் அந்நியப் புத்தகங்களைப் படிப்பதோடு நின்று விடாமல் தமது நாட்டையும், தமது மக்களையும் படித்தறிய வேண்டுமென்று’ தாகூர் தம் உரைகளிலும், கட்டுரைகளிலும் வலியுறுத்தினார்’’ கல்வி மூலமாக அன்னிய மேலாதிக்கம் நிலைநாட்டப்படுவதை ஏற்கமுடியாது; நமது கட்டுப்பாட்டில் கல்வியைக் கொண்டு வர வேண்டும்; அன்னியக் கல்வியை அச்சுப்பிசகாது நாம் அப்படியே பின்பற்றினால் நமக்கு மனவளமோ, பலன்களோ இரண்டுமே கிடைக்காது’’ என்றார்.

Thursday, 7 December 2017

ஓவியங்கள்

சித்தன்னவாசல் குகை ஓவியங்கள், இந்தியாவின் மாநிலமான தமிழ்நாட்டின் புதுக்கோட்டை மாவட்டத்தில் உள்ள சித்தன்னவாசல் என்ற கிராமத்தில் அமைந்துள்ளது. இக்கிராமம் குடைவரை ஓவியங்கள் மற்றும் குகை ஓவியங்களுக்கும் மிகப் புகழ் பெற்றவை.
சமணர் காலத்து ஓவியங்களான இவை கி.பி 7 மற்றும் 8 ஆம் நூற்றாண்டை சேர்ந்தவை. குன்றுகளால் சூழப்பட்ட சித்தன்னவாசல் ஓவியங்கள், சமணர்களால் மூலிகையால் தயாரிக்கப்பட்ட வர்ணங்களை கொண்டு வரையப்பட்டவை. இந்தியாவின் வட பகுதியில் காணப்படும் அஜந்தா ஓவியங்களை போன்று தனிச்சிறப்பு மிக்க இந்த ஓவியங்கள் சுமார் 1000 - 1200 ஆண்டு பழமையானவை.[

Wednesday, 6 December 2017

மகரக்குறுக்கம்

மகரக் குறுக்கம்


மகரம் + குறுக்கம் = மகரக்குறுக்கம்





                                               மகரக் குறுக்கம்


"ம்" என்னும் எழுத்து தனக்குரிய அரை மாத்திரையிலிருந்து கால் மாத்திரையாகக் குறைந்து ஒலிப்பது மகரக் குறுக்கம் ஆகும்.


உதாரணம்
வரும் வண்டி

இங்கே நிலைமொழியீற்றில் 'ம' மகரமும் வருமொழி முதலில் 'வ' வகரமும் வந்துள்ளது. இது போல "நிலைமொழியீற்றில் மகரம் இருந்து வகர முதல் மொழியோடு புணரும் போது நிலைமொழியீற்றிலுள்ள மகரம் கால் மாத்திரையளவே ஒலிக்கும்". இது ஒரு வகை மகரக்குறுக்கம்.

"செய்யுள் இறுதிப் போலி மொழிவயின்
னகார மகாரம் ஈர் ஒற்றாகும்" - (தொல். 51)

செய்யுளின் இடையில் 'போன்ம்' - வென்வேல் அண்ணல் மெல்லியன் போன்ம் என

செய்யுள் இறுதியில் 'போலும்' - முயக்கமும், தண்டாக் காதலும் தலைநாள் போன்மே.

பாடல்களின் முடிவில் போலும் என்று வரும் சொல்லில் 'னகரமும்' 'மகரமும்' ஒன்றாகி 'போன்ம்' என்று ஈரொற்றாக நிற்கும். இந்நிலையில் மகரம் தன் ஒலிப்பளவிலிருந்து குறைந்து ஒலிக்கும். இது மற்றொரு வகை மகரக்குறுக்கம் ஆகும்.                

Tuesday, 5 December 2017

மாணவ மைய கலைத்திட்டம்

கற்பிக்கும் கல்வியால் தன்னம்பிக்கை உள்ள சமுதாயத்தை உருவாக்க முடியவில்லை என்றால் அது இந்த கல்வித்திட்டம் அடைந்திருக்கும் மிகப்பெரிய தோல்வி. புத்தகத்தில் படித்ததை அப்படியே திருப்பி எழுதத் தெரிந்த மனப்பாட மெஷின்களாக மாணவர்களை உருவாக்கி அதிலும் அச்சுப் பிசகாமல் வெளிப்படுத்த தெரிந்த மெஷினை தோள்களில் தூக்கி வைத்து கொண்டாடுவது பல ஆண்டுகாலமாக தொடர்ந்து வரும் வேடிக்கை. இவர்களால் புதிதாக சிந்திக்கவோ, புதிய விஷயங்களை கண்டறியவோ முடியாது என்கிற உண்மை புரிந்த பின்னர் இப்போதுதான் கல்வித்திட்டத்தை மாற்றியமைத்துள்ளனர்.
மாணவர்களை மையப்படுத்திய கல்வித் திட்டம் தற்போது அமல்படுத்தப்பட்டுள்ளது. மாணவன் என்பவன் சொன்னதைக் கேட்டு, மாற்றமேதும் இல்லாமல் செய்து காட்டும் கணினி கிடையாது. சிந்திக்கத் தெரிந்தவன் மனிதன். அவனது சுய விருப்பங்களுக்கு மதிப்பளிப்பதன் மூலம் தான் அவர்களை உதாரண மனிதர்களாக உருவாக்க முடியும். வீட்டில், சமுதாயத்தில் மற்றும் கல்வி நிலையத்தில் என பல இடங்களிலும் சந்திக்கும் உளவியல் ரீதியான பிரச்னைகளுக்கு தீர்வு காணாமல் தேர்ச்சி விகிதத்தை அதிகரிக்க முடியாது என்பதை இப்போது தான் புரிந்து கொண்டுள்ளது கல்வித்துறை. 
மாணவர்கள் எந்த மன இடர்பாடும் இன்றி கல்வியைத் தொடர தமிழகம் முழுவதும் மண்டல வாரியாக 10 உளவியல் நிபுணர்கள் பள்ளிக் கல்வித்துறையால் பணியில் அமர்த்தப்பட்டுள்ளனர். மாணவர்களின் தேர்ச்சி விகிதத்தை அதிகரிப்பதற்காக அரசு பள்ளி மாணவர்களை தயார்படுத்துவதுதான் இத்திட்டத்தின் மைய நோக்கம்.
இவ்வாறு நியமிக்கப்பட்டுள்ள உளவியல் நிபுணர்களுக்கு பிரத்யேகமாக கவுன்சிலிங் வேன் ஒன்றும் கொடுக்கப்பட்டுள்ளது. இதில் எல்.சி.டி. டிவி வழங்கப்பட்டுள்ளது. மேலும் உளவியல் சார்ந்த விழிப்புணர்வை ஏற்படுத்தும் புத்தகங்களும் இதில் இடம் பெற உள்ளன. இதில் உளவியல் சார்ந்த விழிப்புணர்வை ஏற்படுத்தும் காணொளிக் காட்சிகளும் இடம் பெறுகிறது.

Monday, 4 December 2017

ஆய்த எழுத்து

ஆய்த எழுத்து தனக்குரிய அரை மாத்திரையில் இருந்து கால் மாத்திரையாகக் குறைந்து ஒலிப்பது ஆய்தக்குறுக்கம் ஆகும்.


உதாரணம்
முள் + தீது = மு ஃ டீது

மேற்காணும் உதாரணத்தில் நிலைமொழியில் தனிக் குறிலின் கீழ் வரும் 'ளகரம்' 'தகர' முதன் மொழியோடு புணரும் பொழுது ஆய்தமாக மாறியுள்ளது. அவ்வாறு மாறிய ஆய்தம் தனக்குரிய அரை மாத்திரையில் இருந்து கால் மாத்திரையாகக் குறைந்து ஒலிப்பது ஆய்தக் குறுக்கம் ஆகும்.                

Sunday, 3 December 2017

இலக்கண வகைகள்

மொழி என்பது ஒருவரின் கருத்தை வெளியிடவும்,அதை மற்றொருவர் புரிந்து கொள்ளவும் பயன்படுகிறது. அம்மொழியைப் பிழையின்றி பேசவும் எழுதவும் துணை செய்வது, இலக்கணம் ஆகும். முத்தமிழில் ஒன்றான இயற்றமிழின் (செய்யுள் மற்றும் உரைநடை ஆகியவற்றின் தொகுதி) இலக்கணத்தை விளக்க உதவுகிறது.

Saturday, 2 December 2017

தமிழ் எண்கள்

         தமிழ் எண்களின் பட்டியல். தமிழ் எண்கள் மற்றும் அதன் பெயர்களை படித்து தெரிந்துகொள்ளுங்கள்.


Friday, 1 December 2017

எழுத்திலக்கணம்

எண், பெயர், முறை, பிறப்பு, உருவம், மாத்திரை, முதல், ஈறு, இடைநிலை, போலி, பதம், புணர்ப்பு போன்ற பன்னிரண்டு பகுதிகளையும் எடுத்துரைப்பது எழுத்து இலக்கணம் ஆகும். எழுத்து - மொழிக்கு ஒலிவடிவம், வரிவடிவம் ஆகிய இரண்டையும் கொடுக்கிறது. ஒலி வடிவம் என்பது ஒரு எழுத்தை உச்சரிக்கும்போது எழும் ஒலியைக் குறிக்கின்றது. வரி வடிவம் என்பது எழுத்தின் வடிவத்தைக் குறிக்கின்றது. எழுத்திலக்கணம் இரு வகைப்படும். அவை,
  1. 1. முதல் எழுத்து
  2. 2. சார்பு எழுத்து