Wednesday, 20 September 2017

நோய் நீக்கும் மூலிகைகள்

நோய் நீக்கும் மூலிகைகள் : துளசி: இவை வீடு, தோட்டம், நந்தவனங்களில் எளிதில் கிடைக்கும் ஒரு மூலிகை. துளசி பட்ட நீரும் மருந்தாகும் என்ற வகையில், இந்த துளசி நீரானது உடலை மட்டுமின்றி, மனதையும் தூய்மைப்படுத்தும். துளசி இலை போட்டு ஊறிய தீர்த்தம் வயிறு சுத்திகரிக்கப்பட்டு, நல்ல ஜீரண சக்தியை தரும். "திருத்துழாய்" என்று அழைக்கப்படும் துளசிதான் கோவில்களில் பிரசாதமாக வழங்கப்படுகிறது. துளசி இலைச் சாறில் தேன், இஞ்சி முதலியன கலந்து ஒரு தேக்கரண்டி அருந்தலாம். சளி, இருமல் உள்ள குழந்தைகளுக்கு தினமும் மூன்று வேளை மூன்று தேக்கரண்டி இந்த துளசிக் கஷாயம் கொடுத்தால் போதும். துளசி இலைகளை நீரிலிட்டுக் கொதிக்கச் செய்து ஆவிபிடித்தால் மார்ப்புச்சளி, நீர்கோவை, தலைவலி நீங்கும். 

No comments:

Post a Comment