Sunday, 24 September 2017

பகுபதம்

பகுபதம் என்பது பகுக்க அல்லது பிரிக்கக்கூடிய வகையில் அமைந்த சொல். பதம் என்பது சொல் என்ற பொருளைத்த ருகிறது. பகுபதத்தை பகுதி, விகுதி, இடைநிலை, சாரியை, சந்தி, விகாரம் என்ற ஆறாகப் பகுக்க முடியும். பொருள், இடம், காலம், சினை, குணம், தொழில் ஆகிய ஆறுவகைப் பெயர்களையும் அடிப்படையாகக் கொண்டு பிறக்கின்ற பெயர்ச் சொற்கள்; தெரிநிலை வினை ஆயினும், குறிப்பு வினை ஆயினும் காலத்தைக் காட்டுகின்ற வினைச் சொற்கள் ஆகியவை பகுபதங்கள் எனப்படும்.[1]
வகைகள் தொகு
பெயர்ப் பகுபதம்
வினைப் பகுபதம்
என இரு வகைப்படும்.
பெயர்ப் பகுபதம் [2] தொகு
பொருளை அடிப்படையாகக் கொண்டு பிறக்கும் பெயர்ப் பகுபதம்
பொன்னன், இனியன், செல்வந்தன். போன்றவை.
இடத்தை அடிப்படையாகக் கொண்டு பிறக்கும் பெயர்ப் பகுபதம்
நாடன், மதுரையான், கும்பகோணத்தான். போன்றவை
காலத்தை அடிப்படையாகக் கொண்டு பிறக்கும் பெயர்ப் பகுபதம்
ஆதிரையான், வேனிலான், இரவோன், பகலோன், வெய்யிலோன் போன்றவை.

No comments:

Post a Comment