Tuesday, 31 October 2017

உமர்கய்யாம் பாடல்கள்

பத்தொன்பதாம் நூற்றாண்டில் பிறந்து இருபதாம் நூற்றாண்டில் புகழ்பெற்று விளங்கிய கவிஞர்கள்;
சுப்பிரமணிய பாரதியார்
கவிமணி தேசிகவிநாயகம் பிள்ளை
பாவேந்தர் பாரதிதாசன்
நாமக்கல் இராமலிங்கம் பிள்ளை
ஆகிய நால்வருமாவர். அவருள்;
பாரதி ஒரு விடுதலை இயக்கக் கவிஞர்;
பாவேந்தர் ஒரு திராவிட இயக்கக் கவிஞர்;
நாமக்கல்லார் ஒரு தேசிய இயக்கக் கவிஞர்.
ஆயின்,கவிமணி தேசிக விநாயகம் பிள்ளை ஓர் இயக்கம் சாரா இனிமைக் கவிஞர், எளிமைக் கவிஞர், உண்மைக் கவிஞர், உணர்ச்சிக் கவிஞர் எனக் கூறுதல் சாலப் பொருந்தும்.
"அழகு என்பதே உண்மை, உண்மை என்பதே அழகு" என்றார் ஆங்கிலக் கவிஞர் கீட்ஸ். கவிமணியின் பாடல்களில் உண்மையும் அழகும் கைகோர்த்துச் செல்வதை உணர முடியும்.

Monday, 30 October 2017

வழு வகைகள்

தமிழில் வழு என்பது இலக்கண முறையின்றிப் பேசுவதும்,எழுதுவதும் வழு எனப்படும்,
வழு எட்டு வகைப்படும்.அவையாவன
வழு வகைகள் தொகு
திணை வழு - எ.கா -என் அத்தை வந்தது
பால் வழு - எ.கா -கோவலன் வந்தாள்
இட வழு - எ.கா - கமலா சிரித்தாய்
காலவழு - எ.கா - கரிகாலன் நேற்று வருவான்
வினா வழு - கன்று ஈன்றது எருதுவா? பசுவா?
விடை வழு - எ.கா -நாளை பள்ளி திறக்கப்படுமா என்ற வினாவுக்கு பேருந்து பழுதடைந்து விட்டது எனக் கூறுவது விடை வழு
மரபு வழு - எ.கா - சிங்கம் பிளிறும்
எண் வழு - குயில்கள் கூவியது (இதனை ஒன்றன் பால் அல்லது பலவின் பால் என்ற அடைப்படையில் நோக்கப்பட்டு வழு ஏழு வகை எனவும் குறிப்பிடுவர்

Sunday, 29 October 2017

பெருந்தலைவர் காமராசர்

தன்னுடைய உழைப்பால், தொண்டால் படிப்படியாக உயர்ந்தவர் காமராசர்.. பெருந்தலைவர், தென்னாட்டு காந்தி, படிக்காத மேதை என்றெல்லாம் அழைக்கப்பட்ட அவர், இந்தியாவின் மதிக்கத்தக்க இரண்டு பிரதமர்களை உருவாக்கியவர்.  இன்றைய நாட்குறிப்பில் ‘கிங்மேக்கராகப்’ போற்றப்படும் காமராஜரை பற்றி தற்போது பார்க்கலாம்.
காமராசரின் வாழ்க்கை வரலாறு:
● 1903-ம் ஆண்டு விருதுநகரில் குமாரசாமி மற்றும் சிவகாமியம்மாளுக்கு மகனாக பிறந்தவர் பெருந்தலைவர் காமராசர்.
● 1908ம் ஆண்டு ஏனாதி நாராயண வித்யா சாலையில், ஆரம்பக்கல்வியை தொடங்கினார். 6 வயதில், தனது தந்தை இறந்ததால், பள்ளிப்படிப்பை தொடர முடியாத நிலைக்கு ஆளான காமராசர், சிறு வயதிலேயே துணிக்கடைக்கு வேலைக்கு செல்லும் நிலைக்கு தள்ளப்பட்டார்.
● 1920ம் ஆண்டு தனது 16 வயதில், காங்கிரஸ் கட்சியில் உறுப்பினரான காமராசர், ஆங்கிலேயருக்கு எதிரான அனைத்து போராட்டங்களிலும் பங்கேற்று 6 முறை சிறைக்கு சென்று 9 ஆண்டுகள் தண்டனை அனுபவித்தார்.
● காங்கிரஸ் தலைவர் தீரர் சத்திய மூர்த்தியை அரசியல் குருவாக மதித்த காமராசர், 1953-ஆம் ஆண்டு தமிழக முதலமைச்சராக பொறுப்பேற்றார்.

Saturday, 28 October 2017

சொல்

எழுத்து அல்லது எழுதுதல்  என்பது, ஒரு தொகுதி குறியீடுகளைப் பயன்படுத்தி மொழியை வரிவடிவில் வெளிப்படுத்துவதற்கான ஒரு முறையாகும். இக் குறியீடுகளின் தொகுதி எழுத்து முறைமை எனப்படுகிறது. இது, வரைதல்கள், ஓவியங்கள் போன்ற படவடிவங்களிலிருந்தும், மொழியைப் பதிவுசெய்யப் பயன்படும் காந்தநாடா போன்ற வரிவடிவம் அல்லாத பிற வடிவங்களிலிருந்தும் வேறுபடுகின்றது. கணக்கு வைத்துக் கொள்ளவேண்டிய தேவை காரணமாகவே "எழுத்து" தோன்றியது எனப்படுகிறது. கிமு நான்காம் நூற்றாண்டளவில் மெசொப்பொத்தேமியாவில் வணிகத்தினதும், நிர்வாகத்தினதும் சிக்கல்தன்மை, நினைவாற்றலின் வலுவையும் தாண்டி வளர்ந்தபோது எழுத்து, வணிகப் பரிவர்த்தனைகளைப் பதிவு செய்வதற்கான நம்பத்தகுந்த ஒரு நிரந்தர வடிவமாக உருவானது.[1] பண்டைய எகிப்திலும், மெசொப்பொத்தேமியாவிலும், காலத்தைப் பதிவு செய்வதற்காகவும், வரலாற்று மற்றும் சூழலியல் நிகழ்வுகளைப் பதிவுசெய்வதற்கான அரசியல் தேவைகளுக்காகவுமே எழுத்து தோற்றம் பெற்றிருக்கலாம் எனக் கருதப்படுகிறது.
சுருங்கக் கூறின், சொல் என்பது 'ஒலியின் வரி வடிவமே' ஆகும். வையகத்தில் உள்ள பெரும்பாலான ஒலிகளுக்கு எழுத்துக்கள் உள்ளன. பல ஒலிகளுக்கு எழுத்துக்களே இல்லை எனலாம் (உம். யானையின் பிளிறல்).

Friday, 27 October 2017

தமிழ் வளர்த்த சான்றோர்கள்

அயன்மொழி பேசும் மேலைநாடுகளிலிலுந்து தமிழ்நாட்டுக்கு வந்து தமிழ்ப்பயிர் செழிக்க நீர்ப்பாய்ச்சியும், உரமிட்டும் தமிழ் வளர்த்த பெருமக்கள் பலர்.அவர்களில் குறிப்பிடத்தக்கவர்கள்
ஆண்டர்சன் இராபர்ட் (இங்கிலாந்து) - தமிழ் இலக்கண நூல் ஒன்றை ஆங்கிலத்தில் எழுதினார்.
ஆண்ட்ரனோவ் (ரஷ்யர்) - உலக வரலாற்று நூலில் தமிழைச் சிறப்பித்தவர்.
ஆர்னால்டு - தமிழ் மென்மையான மவழிகளில் ஒன்று என உலகுக்குக் காட்டியவர்.
ஆஸ்சிங்கடந்(து) (அமெரிக்கா) - கந்தபுராணத்தை ஆங்கிலத்தில் மொழிபெயர்த்தவர். சைவ நெறியை மேலைநாடிஎளில் வளர்த்தவர்.
இராட்லர் - தமிழ்-ஆங்கிலம் அகராதி வெளியிட்டவர்
இராபர்ட் தே நோபிலி (இத்தாலி) - தமிழ் பேச்சுமொழி இலக்கணம் இலக்கணம் தந்தவர். பல உரைநடை நூல்களைத் தொகுத்தவர்ய
எல்லிஸ் துரை - திருக்குறள் முதல் 13 அதிகாரங்களை ஆங்கிலத்தில் மொழிபெயர்த்துள்ளார். தங்கக் காசில் வள்ளுவர் உருவத்தைப் பொறித்தவர்.
என்றிகஸ் அடிகளார் (போர்ச்சுக்கல்) - புன்னைக்காயல் கல்லூரியில் தமிழ்ப் பேராசிரியராகப் பணியாற்றியவர். தமிழ் இலக்கண நூல் தொகுத்தவர். தமிழ்நாட்டில் தமிழ்ப் பல்கலைக் கழகம் அமைய முதன்முதலில் குரல் கொடுத்தவர்.
கவார்ட்ஸ் - தஞ்சை சரபோஜி மன்னர் உதவியுடன் தஞ்சையிலும், திருச்சியிலும் தமிழ் வளர்த்தவர்.

Thursday, 26 October 2017

ஜி.யு.போப்

ஜி. யு. போப்e, ஏப்ரல் 24, 1820 - பெப்ரவரி 12, 1908) கனடாவில் பிறந்து கிறிஸ்தவ சமய போதகராக தமிழ் நாட்டிற்கு வந்து 40 ஆண்டு காலம் தமிழுக்கு சேவை செய்தவர். திருக்குறள், நாலடியார், திருவாசகம் நூல்களை ஆங்கிலத்தில் மொழி பெயர்த்தவர்.
வாழ்க்கைச் சுருக்கம் தொகு
கனடாவின் பிரின்ஸ் எட்வெர்ட் தீவில்) என்னுமிடத்தில் ஜான் போப், காதரீன் யூக்ளோ போப் ஆகியோருக்கு பிறந்தார் போப். ஜீயார்ஜ் யூக்ளோ என்பது போப்பின் இயற்பெயர்.[1] தந்தையாரின் வாணிபத்திற்காக எட்வர்ட் தீவு சென்றிருந்த குடும்பம், போப்பின் குழந்தைப் பருவத்திலேயே 1826 ஆம் ஆண்டு இங்கிலாந்துக்கு குடும்பத்துடன் திரும்பியது.[1]19 வயது வரை ஹாக்ஸ்டன் கல்லூரியில் கல்வி பயின்றார்.

Wednesday, 25 October 2017

குற்றியலுகரம்

குற்றியலுகரம் என்பது ஒரு தமிழ்ச் சொல்லில் உள்ள உகரம் ஏறிய வல்லின எழுத்து (எ.கா: கு, சு, டு, து, பு, று) சொல்லின் கடைசி எழுத்தாக வரும் பொழுது, மற்ற குறில் உயிர்மெய் எழுத்துகள் (எ.கா: ற, கி, பெ) போல் ஒரு மாத்திரை அல்லாமல் அரை மாத்திரை அளவேயாகக் குறைந்து ஒலிக்கும் வரையறை கொண்டது.
இதனையே வேறு விதமாகச் சொல்வதென்றால், தனி நெடிலுடனோ, பல எழுத்துகளைத் தொடர்ந்தோ சொல்லுக்கு இறுதியில் வல்லின மெய்யோடு சேர்ந்து வரும் உகரம், தனக்குரிய ஒரு மாத்திரையிலிருந்து குறைந்து அரை மாத்திரையளவே ஒலிக்கும். குற்றியலுகரம் என்பது அவ்வாறு குறைந்தொலிக்கும் உகரமாகும்.
குற்றியலுகரம் = குறுமை + இயல் + உகரம்
(குறுகிய ஓசையுடைய உகரம்)

Tuesday, 24 October 2017

குற்றியலிகரம்

நிலைமொழியின் ஈற்றெழுத்து குற்றியலுகரமாகவும் வருமொழியின் முதலெழுத்து யகரமாகவும் இருந்தால், அவையிரண்டும் புணரும்போது நிலைமொழி ஈற்றிலுள்ள குற்றியலுகரம் இகரமாகத் திரியும். அவ்வாறு திரிந்த இகரம் அரை மாத்திரையளவே ஒலிக்கும். அவ்வாறு குறைந்தொலிக்கும் இகரம் குற்றியலிகரம் ஆகும்
குறுமை + இயல் + இகரம் = குற்றியலிகரம்
(குறுகிய ஓசையுடைய இகரம்)
"யகரம் வர குறள் உ திரி இகரம் உம்
அசைச்சொல் மியாவின் இகரம் உம் குறிய" - நன்னூல்
எ.கா:
நாடு + யாது -> நாடியாது
கொக்கு + யாது -> கொக்கியாது
மேற்கண்ட எடுத்துக்காட்டுகளில், நிலைமொழியின் ஈற்றெழுத்து குற்றியலுகரம். வருமொழியின் முதலெழுத்து யகரம். இவையிரண்டும் புணரும்போது குற்றியலுகரம் இகரமாகத் திரிந்து, அரை மாத்திரையளவாக ஒலிப்பதை காணலாம்

Saturday, 21 October 2017

இனியவை நாற்பது

பூதஞ்சேந்தனார் என்பவர் இயற்றிய நூல் இனியவை நாற்பது. இது நாற்பது வெண்பாக்களினால் ஆனது. பண்டைக்காலத் தமிழ்நூல் தொகுப்புக்களில் ஒன்றான பதினெண்கீழ்க்கணக்கு நூல்களுள் இதுவும் ஒன்று. உலகில் நல்ல அல்லது இனிமையான விடயங்களை எடுத்துக்கூறுவதன் மூலம் மக்களுக்கு நீதி புகட்டுவதே இந்நூலின் நோக்கம். ஒவ்வொரு பாடலும் மூன்று நல்ல விடயங்களை எடுத்துக் கூறுகின்றது.
எடுத்துக்காட்டு
சுற்றியிருப்பவர்களுக்குக் கல்வி கற்பித்தல் மிகவும் நல்லது; கற்றறிந்த பெரியோர்களைத் துணை கொண்டு வாழ்தலும் மிக நன்று; சிறிய அளவிலாயினும் தேவைப்படுபவர்களுக்குக் கேட்காமலேயே கொடுப்பது எப்பொழுதுமே நல்லது என்னும் பொருள்படும் இந்நூற் பாடலொன்று பின்வருமாறு:
சுற்றார்முன் கல்வி உரைத்தல் மிகஇனிதே
மிக்காரைச் சேர்தல் மிகமாண முன்இனிதே
எள்துணை யானும் இரவாது தான்ஈதல்
எத்துணையும் ஆற்ற இனிது.
இது போல் இந்நூலில் 124 இனிய சொற்கள் கூறப்படுகின்றன. இந்நூல் பதினெண் கீழ்க்கணக்கில் உள்ள நான்கு நாற்பது பாடல்களைக் கொண்ட நூல்களில் இரண்டாவதாகும்.

Friday, 20 October 2017

தமிழ்ப்பசி

தமிழ்ப்பசி - 8 ஆம் வகுப்பு சமச்சீர்
பொன்னின் குவை எனக்கு வேண்டியதில்லை-என்னை
போற்றும் புகழ் எனக்கு வேண்டியதில்லை
மன்னன் முடிஎனக்கு வேண்டியதில்லை-அந்த
மாறன் அழகு எனக்கு வேண்டியதில்லை
கன்னி தமிழ் எனக்கு வேணுமேயடா-உயிர்க்
கம்பன் கவி எனக்கு வேணுமேயடா !
நூல்கள் கனித்தமிழில் அள்ளிட வேண்டும் - அதை
நோக்கித் தமிழ்ப்பசியும்  ஆறிட வேண்டும்
சொற்பொருள்:
குவை - குவியல்
மாரன் - மன்மதன்
ஆசிரியர் குறிப்பு:
இயற்பெயர் - க.சச்சிதானந்தன்
ஊர் - இலங்கையில் யாழ்ப்பாண   மாவட்ட பருத்தித்துறை
பணி - ஆசிரியர் பயிற்சி கல்லூரியில் விரிவுரையாளர் பணி
புலமை - தமிழ், ஆங்கிலம், சமஸ்கிருதம் ஆகிய மும்மொழிகளில் புலமை.
படைப்புகள் - ஆனந்தத்தேன்(கவிதைத்தொகுதி - 1954), அன்னபூரணி (புதினம்), யாழ்பாணக்காவியம்
சிறப்பு - மகாவித்துவான் நவநீதகிருட்டின பாரதியின் மாணவர். இவர் தம் பாடல்களில் கம்பனின் மிடுக்கையும், பாரதியின் சினப்போக்கையும் ஒருமித்துக் காணலாம்.

Thursday, 19 October 2017

செய்தி உருவாகும் வரலாறு

உலகில் எங்கே ஒரு மூலையில் நடைபெறும் சிறிய நிகழ்வு செய்தி ஆகிறது.
அறிவியல் தொழில்நுடப் வளர்ச்சியின் பெரிய முன்னேற்றத்தின் விளைவாக உடனுக்குடன் செய்திகள் வெளியிடப்படுகின்றன.
ஏன்? என்ன? எப்போது? எப்படி? எங்கே? யார்? எனும் அன்புத் தொண்டர் ஆறுபேர்கள் அறியச் செய்வார் செய்தியினை கூறியவர் - அறிஞர் கிப்ளிங்
ஏன்? என்ன? எப்போது? எப்படி? எங்கே? யார்? எனும் வினாக்களுக்கு விடைகள் இடம்பெறும் பக்கம் - செய்தியின் முகப்புப் பக்கம்.
ஏன்? என்ன? எப்போது? எப்படி? எங்கே? யார்? எனும் வினாக்களுக்கு விடைகள் காணும் பணி - கடலில் மூழ்கி முத்தெடுப்பது போன்ற அரிய பணி.
செய்தியை இனங்கண்ட பின்னர் செய்தியாளர் செய்தியைத் திரட்டும் பணியில் ஈடுபடுகிறார்கள்.
செய்தியைப் பெறுதல் என்பது துப்பறிதல் போன்றது.
செய்தியாளர்கள் அரசின் அறிக்கை, வாணிகக் குழுக்களின் வெளியீடுகள், நிதியமைச்சரின் வரவு செலவுத் திட்டங்கள் போன்றவற்றை படித்து செய்தியைத் திரட்டுகின்றார்கள்.
செய்தியாளர்கள் அறவியல் ஆய்வு முறைகளையும் அவற்றை எப்படி பயன்படுத்துவது என்பதையும் அறிய புள்ளியியல் உதவுகிறது.
  பொதுமக்களின் கருத்துக்களை கூறெடுப்பு ஆய்வு வாயிலாக நடத்துவார்கள்.
செய்திகளை உள்ளூர்ச் செய்தியாளர், வெளியூர்ச் செய்தியாளர், சிறப்புச் செய்தியாளர், ஆர்வலர்கள் அரசு அறிக்கைகள், செய்தி நிறுவனங்கள் மூலம் பெறலாம்.
உலகெங்கும் நடக்கும் செய்திகளை கம்பியில்லாத் தந்தி, தொலைபேசி, செல்பேசி, தொலை அச்சு தொலை நகல், வானொலி. தொலைக்காட்சி, கணினி மூலம் உடனுக்குடன் பெறலாம்.
இலண்டன் டைம்ஸ் இதழின் செய்தியாளர் இந்திய சீனப்போரின் போது நேரடியாகப் போர் நடைபெறிகின்ற இடத்திற்குச் சென்று செய்திகளைத் திரட்டினார்கள்.
  "இந்தியன் எக்ஸ்பிரஸ்" செய்தியாளர் தில்லியிலுள்ள சிறைச்சாலையின் நிலை பற்றி அறிய தானே சிறைப்பட்டு செய்திகளைத் திரட்டித்தந்து புகழ் பெற்றார்.
விளையாட்டுப் போட்டிகள், புகழ்பெற்ற விசாரணைகள், சட்டப்பேரவை நடவடிக்கைகள், மாநாடுகள், பொதுக்கூட்டங்கள் ஆகியவற்றை காண செய்தியாளர்களுக்குத் தனி இடம் ஒதுக்கியிருப்பர்.
செய்தியின் பகுதிகள் தலைப்புச் செய்தி, முகப்புச்செய்தி, உடல்பகுதிச் செய்தி (மூன்று) எனப் பதிப்புகள் பிரிக்கப்பட்டு விடியற்காலையில் அனைவருக்கும் கிடைக்கும் வகையில் செய்தித்தாள்கள் அச்சடிக்கப்படுகின்றன.

Wednesday, 18 October 2017

நளவெண்பா


ஆசிரியர் குறிப்பு :
பெயர் :  புகழேந்திப் புலவர்
பிறந்த ஊர் :  தொண்டைநாட்டின் பொன்விளைந்த களத்தூர்
சிறப்பு :  வரகுண பாண்டியனின் அவைப் புலவர்
ஆதரித்த வள்ளல் :  சந்திரன் சுவர்க்கி
காலம் :  கி.பி. பனிரெண்டாம் நூற்றாண்டு, கம்பரும், ஒட்டக்கூத்தரும்இவர் காலத்தில் வாழ்ந்தனர்.
வெண்பா யாப்பில் காப்பிய பொருளைத் தொடர்நிலைச்
செய்யுள்களாய் பாடிய சிறப்பினால், இவர் “வெண்பாவிற் புகழேந்தி”எனப் போற்றப்படுகிறார்.
நூல் குறிப்பு :
நளவெண்பா என்பது, நளனது வரலாற்றை வெண்பாக்களால்
கூறும் நூலென விரிந்து பொருள் தரும்.
இந்நூல் முப்பெரும் காண்டங்களை உடையது. அவை,
சுயம்வர காண்டம்
கலித்தொடர் காண்டம்
கலிநீங்கு காண்டம்
இதில் 431 வெண்பாக்கள் உள்ளன.

Tuesday, 17 October 2017

உலகம் உள்ளங்கையில்

கணினியின் தோற்றமும் வளர்ச்சியும் :
கணக்கிடுவதற்காக முதலில் எளிதான “மணிச்சட்டம்”
உருவாக்கப்பட்டது. இதுவே கணினி உருவாக முதல் படியாக
இருந்தது.
பாரிஸ் நகரை சேர்ந்த பிளேஸ் பாஸ்கல் என்பவர் கணக்கிடும்
கருவியை கண்டுபிடித்தார். கி.பி 1833 இல் இங்கிலாந்து நாட்டைச்
சார்ந்த சார்லஸ் பாப்பேஜ் என்பவர் கணினியை முதலில்
வடிவமைத்தார். இவரே “கணினியின் தந்தை” என
அழைக்கப்படுகிறார்.
ஆங்கில கவிஞர் பைரனின் மகள் லேடி லவ்வோஸ் என்பவர்,
கணிதச் செயல்பாட்டுக்குத் தேவையான கட்டளைகளை
வகுத்தமையால், “முதல் செயல் திட்ட வரையாளர்” எனப்
போற்றப்படுகிறார்.

Saturday, 14 October 2017

கணிதமேதை இராமானுஜம்

சீனிவாச இராமானுஜன் (டிசம்பர் 22, 1887 – ஏப்ரல் 26, 1920) இந்தியாவில் பிறந்த கணித மேதை. இராமானுசர் 33 அகவை முடியும் முன்னரே இறந்துவிட்டார். இவர் சிறு வயதிலேயே யாருடைய உதவியும் இல்லாமல் மிக மிக வியப்பூட்டும் விதத்தில் கணிதத்தின் மிக அடிப்படையான ஆழ் உண்மைகளைக் கண்டுணர்ந்தார். 1914 ஆண்டுக்கும் 1918 ஆண்டுக்கும் இடைப்பட்ட காலத்தில் 3000க்கும் அதிகமான புதுக் கணிதத் தேற்றங்களைக் கண்டுபிடித்தார். எண்களின் பண்புகளைப் பற்றிய எண்கோட்பாடுகளிலும் (number theory), செறிவெண் (complex number) கோட்பாடுகளிலும் இவர் கண்டுபிடித்துக் கூறிய ஆழ் உண்மைகள் இன்று அடிப்படை இயற்பியற் துறை முதல் மின்தொடர்புப் பொறியியல் துறை வரை பல துறைகளில் உயர்மட்டங்களில் பயன்படுத்தப்பட்டு வருகின்றன. இராமானுசன் அவர்கள் பெயரால் 1997 இல் The Ramanujan Journal என்னும் கணித ஆய்விதழ் ஒன்று தொடங்கப்பட்டுள்ளது.[1]
சீனிவாச இராமானுஜன்
பிறப்பு திசம்பர் 22, 1887
ஈரோடு, சென்னை மாகாணம்
இறப்பு 26 ஏப்ரல் 1920 (அகவை 32)
சேத்துப்பட்டு (சென்னை), சென்னை, சென்னை மாகாணம்
வாழிடம் கும்பகோணம்
தேசியம் இந்தியர்
துறை கணிதம்
கல்வி கற்ற இடங்கள் கும்பகோணம் அரசு கலைக்கல்லூரி
பச்சையப்பன் கல்லூரி

Friday, 13 October 2017

கலித்தொகை

இந் நூலிலுள்ள பாடல்களுள் ஒவ்வொன்றிலும் ஒவ்வொரு பழமொழியை அமைத்து, அதற்கு விளக்கம் கூறும் வகையில் ஆசிரியர் பாடியிருத்தலின், பழமொழி என்னும் சிறப்புப்பெயர் பெற்றது. மேலும் இந்நூல் நானூறு பாடல்களைக் கொண்டுள்ளது. இதனால் பழமொழி நானூறு" என்றும் இது குறிக்கப் பெறும். இதன் ஆசிரியர் மூன்றுறை அரையனார். 

Thursday, 12 October 2017

வளையாபதி


வளையாபதியின் ஆசிரியர் பெயர், இயற்றப் பட்ட காலம், அக்காவியத் தலைவன் பெயர், காவியத்தின் கதை போன்றவை தெரியவில்லை. இக்காவியத்தின் 72 பாடல்கள் தான் கிடைத்துள்ளன. அவற்றில் 66 பாடல்கள் 14-ஆம் நூற்றாண்டில் தோன்றிய புறத்திரட்டிலும், 3 பாடல்கள் சிலம்பின் அடியார்க்கு நல்லார் உரையில் மேற்கோளாகவும், 2 பாடல்கள் யாப்பருங்கலக்காரிகை என்னும் இலக்கண நூலின் பெயர்தெரியாத ஓர் அறிஞரால் இயற்றப்பட்ட விருத்தியுரையில் மேற்கோளாகவும், இளம்பூரணரின் தொல்காப்பிய உரையில் மேற்கோளாக் காணப்படுவதும் கடவுள் வாழ்த்துப் பாடலென்று கருதப்படுவதுமாகிய எஞ்சிய 1 பாடல் நச்சினார்க்கினியர் உரையில் மேற்கோளாகவும் கிடைத்துள்ளன. இது ஒரு சமண சமய நூல். 


Wednesday, 11 October 2017

சிறுபஞ்சமூலம்

கடவுள் வாழ்த்து
முழுது உணர்ந்து, மூன்று ஒழித்து, மூவாதான் பாதம்,
பழுது இன்றி, ஆற்றப் பணிந்து, முழுது ஏத்தி,
மண் பாய ஞாலத்து மாந்தர்க்கு உறுதியா,
வெண்பா உரைப்பன், சில.
காமாதி மூன்றையு மொழித்து முற்றுமுணர்ந்து, முப்பில்லாதான் பாத மனக்குற்ற நீக்கி மிகவும் வணங்கிப் பல குணங்களைப் புகழ்ந்து மண்பரந்த வுலகில் மக்கட் கெல்லாம் உறுதியாகிய பொருள்மேற் றொடுத்து வெண்பாவாகிய சில செய்யுட்களை யுரைப்பேன்.
கருத்துரை: நிலைபெற்ற கடவுளின் அடிகளை வணங்கிப் போற்றி இந்நிலவுலகினர்க்கு நன்மை யுண்டாகுமாறு இந்நூலை யான் கூறுவேன்.
நூல்
பொருள் உடையான் கண்ணதே, போகம்; அறனும்,
அருள் உடையான் கண்ணதே ஆகும்; அருள் உடையான்
செய்யான் பழி; பாவம் சேரான்; புறமொழியும்
உய்யான், பிறன் செவிக்கு உய்த்து. 1
\

Tuesday, 10 October 2017

சிறுபஞ்ச மூலம்

மகாபாரதக்கதையை பெண்ணுரிமைக் காப்பியமாகத் தமிழில் சுப்பிரமணிய பாரதி வடித்துத் தந்ததே பாஞ்சாலி சபதம். இந்திய விடுதலைப் போராட்டத்தைப் பாரதப் போராகவும், பாஞ்சாலியை பாரத தேவியாகவும் உருவகப்படுத்தி மகாகவி படைத்த படைப்பு இது. இலக்கிய நயமும், கவிநயமும் கொண்டுள்ளது. பாஞ்சாலி சபதம் இரு பாகங்கள் கொண்டது. இந்நூலில் சூழ்ச்சிசருக்கம், சூதாட்டச்சருக்கம், அடிமைச்சருக்கம், துகிலுரிதல் சருக்கம், சபதச்சருக்கம் என ஐந்து சருக்கங்களில் நானூற்றுப் பன்னிரண்டு பாடல்கள் உள்ளன.
பாஞ்சாலி சபதம்
நூலாசிரியர் சுப்பிரமணிய பாரதி
மொழி தமிழ்
சிந்து என்னும் பா வகையில் ஆக்கப்பட்ட இந்நூல் எளிய தமிழ்நடையினைக் கொண்டது.

Saturday, 7 October 2017

இக்கால கவிதைகள்

உரைநடைக் கவிதை அல்லது வசன கவிதை என்பது, உரைநடைபோல் அமைந்த கவிதை ஆகும். மிகச் சிலரே தமிழில் உரைநடைக் கவிதைகளை எழுதி வருகின்றனர். உரைநடைக் கவிதைகளைப் பலர் கவிதைகளாக ஏற்றுக்கொள்வதில்லை.[1]
தமிழ்நடையில் உரைநடை, பாட்டுநடை என்னும் பிரிவுகள் உண்டு. கவிதை என்பது பாட்டுநடையில் இருக்கும். பொதுவாக இக்காலத்தில் கவிதையை மரபுக்கவிதை என்றும் புதுக்கவிதை என்றும் பாகுபடுத்திப் பார்க்கின்றனர். புதுக்கவிதையானது எதுகை, மோனை, தளை, முதலான இலக்கண வரையறைக்கு உட்படாமல் சுருக்கமானதாகப் பொருளாழமும், கற்பனை நலனும் கொண்டு சில அடிகளால் அமைந்து காணப்படுகின்றன. இதனை, சப்பான் நாட்டு ஐக்கூ கவிதையோடு ஒப்பிடுகின்றனர்.
இக்கால உரைநடைக் கவிதைகள் கவியரங்குகளில் உரைநடையை அடிமடக்கி எழுதிப் படிக்கப்படுகின்றன. அவை புதுக்கவிதை போல் சுருக்கமானவை அல்ல.

Friday, 6 October 2017

பகாப்பதம்

                    பகாப்பதம்
இப்பாடத்தில் பகாப்பதம், பகுபதம் ஆகியவற்றின் வகைளைக் காண்போம். பகுபதத்தின் உறுப்புகள் பற்றியும் அறிந்து கொள்வோம்.
5.1.1 பகாப்பதத்தின் இலக்கணம்
பிரித்தால் பொருள் தராத பதமே பகாப்பதம் ஆகும். அது இடுகுறியாக வழங்கிவரும்; நெடுங்காலமாக ஒரே தன்மையுடையதாக அமைந்திருக்கும். (இடுகுறி = காரணம் இன்றி இடப்பட்டு வழங்கி வரும் சொல்).
எடுத்துக்காட்டு :
‘மழை பொழிகிறது‘ இந்த வாக்கியத்தில் மழை, பொழிகிறது என்ற இரு பதங்கள் (சொற்கள்) உள்ளன. பொழிகிறது என்பதை, பொழி + கிறு + அது என்று பிரிக்கலாம். ‘பொழி‘ என்பதைப் பிரிக்கமுடியாது. பொ, ழி எனப்பிரித்தால் இரண்டு எழுத்துகளுக்கும் பொருள் இல்லை. அதே போல, ‘மழை‘ என்பதும் பிரித்தால் பொருள் தராதது, ஆகவே ‘மழை‘, ‘பொழி‘ ஆகிய இரண்டும் பகாப்பதம் ஆகும்.
1)

Thursday, 5 October 2017

திராவிட மொழிகள்

கிமு 1500 அளவில், ஆரியர் இந்தியாவுக்குள் நுழைவதற்கு முன், இந்தியா முழுவதும் திராவிட மொழிகளே வழங்கி வந்தது என்பது பல ஆய்வாளர்களது கருத்து.[2] திராவிட மொழிகளில் இருந்து இந்திய ஆரிய மொழிகளுக்குச் சென்றிருக்கும் நாமடங்கு ஒலியன்கள் முதலிய மொழியியல் சான்றுகள் கிடைத்தாலும் இதை அறுதியிட்டுக் கூறும் அளவிற்கு வரலாற்றுச் சான்றுகள் எதுவும் கிடைக்கவில்லை. சரஸ்வதி - சிந்து பள்ளத்தாக்குகளில் வளர்ச்சிபெற்ற நாகரிகமும் திராவிட நாகரீகமே என்ற கருத்தும் பல முன்னணி ஆய்வாளர்களால் முன்வைக்கப்பட்டுள்ளது.[2] ஹரப்பா, மொஹெஞ்சதாரோ முதலிய சிந்துவெளிப் பள்ளத்தாக்கு நகரங்களில் கண்டுபிடிக்கப்பட்ட, இன்னும் வாசிக்கப்படாத எழுத்துக்களும், அக்காலத்தில் வழங்கிய திராவிட மொழிக்கானவையே என்பதும் அவர்கள் கருத்து. ஆனால் , பல ஆய்வாளர்கள் அக்கருத்தை மறுத்தும் வருகிறார்கள். சிந்துவெளிக் குறியீடுகள் எந்த மொழிக்கு உரியவை என்பது இன்னும் அறியப்படாத ஒன்றாகவே இருந்து வருகிறது.
திராவிட மொழிகள் இந்தியத் துணைக்கண்டத்தில் அவற்றின் புவியியற் பரம்பலைக் கருத்திற் கொண்டு ஐந்து பெரும் பிரிவுகளாகப் பிரிக்கப்பட்டுள்ளன.

Wednesday, 4 October 2017

ஆகுபெயர்

அளவைக்குறிக்கும் பெயர்களை அளவைப்பெயர்கள் என்பர்.இவை ஆகுபெயர்களாகவும் வழங்கிவரும். எண்ணல் அளவை ,எடுத்தல் அளவை முகத்தில் அளவை, நீட்டல் அளவை ஆகியன அளவை ஆகுபெயர்களாக வழங்கி வருகின்றன.
ஆகுபெயர் தொகு
ஒரு பொருளின்பெயர் தனக்குரிய பொருளைக் குறிக்காமல் தன்னோடு தொடர்புடைய பொருளைக் குறிப்பது ஆகுபெயர் ஆகும்.இது பதினாறு வகைப்படும்.
அளவை ஆகுபெயர்கள் தொகு
எண்ணல் அளவை எடுத்தல் அளவை முகத்தில் அளவை நீட்டல் அளவை ஆகியன அளவை ஆகுபெயர்களாக வழங்கி வருகின்றன.
எண்ணல் அளவை ஆகுபெயர்ஒ ன்று பெற்றால் ஒளிமயம்
     இத்தொடரில் ஒன்று எனும் எண்ணுப்பெயர் அவ்  எண்ணிக்கையுடைய குழந்தைக்கும் பெயராகி வந்துள்ளது.இஃது எண்ணல் அளவை ஆகுபெயர்.
எடுத்தல் அளவை ஆகுபெயர் அரிசிக் கடைக்குச் சென்று ஐந்து கிலோ என்ன விலை ? கேட்பது. தொகு
 .

Tuesday, 3 October 2017

பொருள்கோள்

தமிழில் வாக்கியங்கள் அமையும் பாங்கைக் கூறுவது சொல்லதிகாரம். தொல்காப்பியச் சொல்லதிகாரத்தில் முதல் 7 இயல்களில் வழக்குத்தமிழில் வரும் வாக்கிய அமைதி பற்றியும், 8 & 9ஆம் இயல்களில் செய்யுள்-தமிழில் வரும் வாக்கிய அமைதி பற்றியும் இலக்கணம் என்னும் புலச் செய்திகள் தொகுத்துச் சொல்லப்பட்டுள்ளன.
செய்யுளில் அமைந்துகிடக்கும் வாக்கிய அமைதியை அண்வயப்படுத்தி வழக்குத்தமிழ் வாக்கியமாக்கிக்கொள்ளும் பாங்குக்குப் பொருள்கோள் என்று பெயர்.
இந்தப் பொருள்கோள் வகைகளில் சிலவற்றை அணி எனவும் காட்டுவர்.
பொருள்கோள் தொகு
செய்யுளில் இடம்பெறும் சொற்களை அமைந்துள்ளவாறே பொருள் கொண்டால் எல்லாச் செய்யுள்களுக்கும் சரியான பொருள் கிடைக்காது. யாப்பு முதலிய காரணங்களுக்காகச் சொற்களை முன்பின்னாக மாற்றுதல் முதலிய பல நிலைகளில் சொற்களைச் சேர்த்தும் பிரித்தும் பொருள் கொண்டால் அச்செய்யுளின் பொருள் விளங்கும். இவ்வாறு செய்யுளில் காணப்படும் தொடர்களைப் பொருள் கொள்ளும் முறையை விளக்குவது பொருள்கோள் ஆகும். 

Monday, 2 October 2017

கம்பராமாயணம்


இராமனது வரலாற்றைக் கூறும் நுால் இராமாயணம் எனப்பட்டது. கம்பராமாயணம் எனும் நுால் கம்பா் எனும் பெரும் புலவரால் இயற்றப்பட்ட தமிழ் நூலாகும். இந்நூல் இந்து சமய இதிகாசங்கள் இரண்டினுள் ஒன்றான இராமாயணத்தினை மூலமாகக் கொண்டு இயற்றப்பட்டதாகும்.கம்பரால் இயற்றப்பட்ட கம்பராமாயணம் ஒரு வழி நுாலாகும். இது வடமொழியில் வால்மீகி என்பவா் இயற்றிய இராமாயணத்தினை தழுவி எழுதப்பட்ட நுால் ஆகும்.. இதுவொரு வழி நுாலாகவே இருந்தாலும் கம்பா் தனக்கே உாித்தான பாணியில் கருப்பொருள் சிதையாமல் தமிழ் மொழியில் இயற்றியுள்ளாா். வடமொழி கலவாத துாய தமிழ்ச்சொற்களைத் தனது நுாலில் கையாண்டதால் கம்பா், தொல்க்காப்பிய நெறி நின்றவா் என்று புகழப்படுகிறாா். { ( "வடசொல் கிளவி வடஎழுத் தொாிஇ எழுத்தொடு புணா்ந்த சொல்லாகுமே " ) (தாெல்காப்பியம், எச்சவியல், 5) }


Sunday, 1 October 2017

பாட மைய கலைத்திட்டம்

அறிமுகம்
கல்விப் புலத்தில் கலைத்திட்டம் ஒரு முக்கிய இடம் பெறுகிறது. கற்றலுக்கு உரியவை எல்லாம் கலை எனப்படுகின்றது. கற்றலுக்கு உரித்தானவற்றுக்கான ஒரு திட்டமே கலைத்திட்டம் எனலாம்.  முறைசார்ந்த அல்லது முறைசாரா வகையில் கல்வியை வழங்குகின்ற சகல தாபனங்களும்  (பாலர் பாடசாலையாகட்டும் அல்லது பல்கலைக்கழகமாகட்டும்) தாம் வழங்குகின்ற கற்றல் கற்பித்தல் செயன்முறை தொடர்பாக முறையான திட்டமொன்றைக் கொண்டிருக்க வேண்டியாதாகவுள்ளது. இத்தாபனங்களில் சேவையாற்றும் நபர்கள் குறிப்பாக ஆசிரியர்கள் இத்திட்டம் தொடர்பான போதுமான அறிவு, திறன்களைக் கொண்டிருக்க வேண்டியதும் மிக  இன்றியமையாதாகும். அதாவது, கல்விப்புலத்தில் நேரடியாகவும் மறைமுகமாகவும் தொடர்புபடுகின்ற நபர்கள் கலைத்திட்டம் பற்றிய பரந்த விளக்கமொன்றை கொண்டிருப்பது அவசியமாகின்றது.