Tuesday, 3 October 2017

பொருள்கோள்

தமிழில் வாக்கியங்கள் அமையும் பாங்கைக் கூறுவது சொல்லதிகாரம். தொல்காப்பியச் சொல்லதிகாரத்தில் முதல் 7 இயல்களில் வழக்குத்தமிழில் வரும் வாக்கிய அமைதி பற்றியும், 8 & 9ஆம் இயல்களில் செய்யுள்-தமிழில் வரும் வாக்கிய அமைதி பற்றியும் இலக்கணம் என்னும் புலச் செய்திகள் தொகுத்துச் சொல்லப்பட்டுள்ளன.
செய்யுளில் அமைந்துகிடக்கும் வாக்கிய அமைதியை அண்வயப்படுத்தி வழக்குத்தமிழ் வாக்கியமாக்கிக்கொள்ளும் பாங்குக்குப் பொருள்கோள் என்று பெயர்.
இந்தப் பொருள்கோள் வகைகளில் சிலவற்றை அணி எனவும் காட்டுவர்.
பொருள்கோள் தொகு
செய்யுளில் இடம்பெறும் சொற்களை அமைந்துள்ளவாறே பொருள் கொண்டால் எல்லாச் செய்யுள்களுக்கும் சரியான பொருள் கிடைக்காது. யாப்பு முதலிய காரணங்களுக்காகச் சொற்களை முன்பின்னாக மாற்றுதல் முதலிய பல நிலைகளில் சொற்களைச் சேர்த்தும் பிரித்தும் பொருள் கொண்டால் அச்செய்யுளின் பொருள் விளங்கும். இவ்வாறு செய்யுளில் காணப்படும் தொடர்களைப் பொருள் கொள்ளும் முறையை விளக்குவது பொருள்கோள் ஆகும். 

No comments:

Post a Comment