Thursday, 30 November 2017

சோதனையின் வகைகள்

அடைவுச் சோதனைகள் இரண்டு வகைப்படும். அவையாவன: ஆசிரியரால் உருவாக்கப்பட்ட அடைவு சோதனை மற்றும் தரப்படுத்தபட்ட அடைவுச் சோதனை என்பனவாகும்.
ஆசிரியரால் உருவாக்கப்பட்ட அடைவுச் சோதனை தொகு
வகுப்பறையில் கற்பிக்கப்பட்ட பாடப்பொருள்களை மட்டும் கவனத்தில் கொண்டு ஆசிரியர்கள் வினாக்களைப் பயன்படுத்துவர். இவ்வினாக்கள் கட்டுரை வினாவாகவோ அல்லது சிறு விடை வினாவாகவோ இருக்கும். நம்பகத்தன்மை, ஏற்புடைமை ஆகிய சிறப்பியல்புகளைக் கொண்டதாகவோ அல்லது இல்லாமலோ இருக்கும். இதைத் தரப்படுத்தபடாத அடைவுச்சோதனை என்றும் அழைக்கப்படும்.
தரப்படுத்தபட்ட அடைவுச் சோதனை தொகு
வகுப்பறையில் மட்டுமல்லாது எங்கு வேண்டுமானாலும் இத்தகைய சோதனைகளைப் பயன்படுத்தலாம். இச்சோதனைகள் நன்கு உருவாக்கப்பட்டவை. ஏற்புடைமை, நம்பகத்தன்மை ஆகிய சிறப்பியல்புகளைக் கொண்டதாக இருக்கும். இத்தகைய அடைவுச் சோதனைகள் ஒரு பள்ளி மாணவர்களுக்கு மட்டுமின்றி அனைத்து மாணவர்களுக்கும் பொருத்தமானதாக அமையும்.
==அடைவு சோதனையை உருவாக்குதல்== வகுப்பறைச் சூழலைச் சிறந்ததாக அமைக்க ஆசிரியர் அடைவு சோதனையை அமைப்பதிலும்,தரப்படுத்துவதிலும் உள்ள முறைகளை அறிந்து கொள்ள வேண்டும். சோதனையை அமைப்பதும்,தரப்படுத்துவதும் கீழ்க்கண்ட படிநிலைகளைக் கொண்டது.

Wednesday, 29 November 2017

பழமொழி நானூறு

                         பழமொழி நானூறு 




 396 - 400 of 400 பாடல்கள்

396. எனைப்பல் பிறப்பினும் ஈண்டித்தாம் கொண்ட
வினைப்பயன் மெய்யுறுதல் அஞ்சி - எனைத்தும்
கழிப்புழி ஆற்றாமை காண்டும் அதுவே
'குழிப்புழி ஆற்றா குழிக்கு'.

விளக்கவுரை :

397. திரியும் இடிஞ்சிலும் நெய்யும் சார்வாக
எரியும் சுடரே ரனைத்தாய்த் - தெரியுங்கால்
சார்வற ஓடிப் பிறப்பறுக்கும் அஃதேபோல்
'நீரற நீர்ச்சார் வறும்'.

விளக்கவுரை :

398. ஓதநீர் வேலி உலகத்தார் அந்நெறி
காதலர் என்பது அறிந்தலால் - யாதொன்றும்
கானக நாட ! பயிலார் 'பயின்றது
வானகம் ஆகி விடும்.

விளக்கவுரை :

399. பரந்தவர் கொள்கைமேல் பல்லாறும் ஓடார்
நிரம்பிய காட்சி நினைந்தறிந்து கொள்க
வரம்பில் பெருமை தருமே 'பரம்பூரி
என்றும் பதக்கே வரும்'

விளக்கவுரை :

(குறிப்பு : தற்சிறப்புப் பாயிரமும் கடவுள் வணக்கமும் சேர்த்து மொத்தம் 401பாடல்கள்).

Tuesday, 28 November 2017

பெரியபுராணம்

பெரியபுராணம் அல்லது திருத்தொண்டர் புராணம் என்பது சேக்கிழார் அவர்களால் பெருங்காப்பிய இலக்கணங்கள் பலவும் கொண்டதாக இயற்றப்பெற்ற சைவ காப்பியமாகும். சுந்தரமூர்த்தி சுவாமிகளின் திருத்தொண்டத் தொகை எனும் நூலை முதல் நூலாக கொண்டும். சுந்தரமூர்த்தி சுவாமிகளை காப்பிய தலைவராக கொண்டும், அவர் போற்றிய சைவ அடியார்களின் வாழ்க்கை வரலாற்றினையும் இந்நூலில் விவரிக்கிறார்.[1] அத்துடன் திருத்தொண்டத் தொகை, நம்பியாண்டார் நம்பி எழுதிய திருத்தொண்டர் திருவந்தாதி ஆகியவற்றை மூலநூல்களாகக் கொண்டும், இரண்டாம் குலோத்துங்கச்சோழனிடம் அமைச்சராக இருந்த சேக்கிழார் பல ஊர்களுக்கும் சென்று திரட்டிய தகவல்களைக் கொண்டும் பெரியபுராணம் எழுதப்பெற்றுள்ளது.[2]
இரண்டாம் குலோத்துங்க சோழனின் ஆனையின்படி தில்லைக்குச் சென்றவர், அங்கிருக்கும் இறைவனான நடராஜன் உலகெலாம் என்று அடியெடுத்துக் கொடுக்க சேக்கிழார் உலகெலாம் உணர்ந்து ஓதற்கு அரியவன் என பெரியபுராணத்தினை தொடங்கியதாக நம்பப்படுகிறது. இடைக்கால இலக்கியத்தில் மக்களின் வாழ்க்கை பற்றி வரலாற்றுப் போக்கில் அறிவதற்கு இந்நூல் உதவுகிறது.[2]

Monday, 27 November 2017

திரிகடுகம்


திரிகடுகம் என்பது பதினெண்கீழ்க்கணக்கு நூல்களுள் ஒன்றாகும். இந்நூல் நல்லாதனார் என்னும் புலவரால் இயற்றப்பட்டதாகும். திரிகடுகம் என்பது மூன்று மருந்துப் பொருட்களைக் குறிக்கும். சுக்கு, மிளகு, திப்பிலி என்னும் மூலிகைகள் உடலுக்கு நன்மை செய்வது போல் இந்நூலில் ஒவ்வொரு பாட்டிலும் உள்ள மூன்று கருத்துக்கள் வாழ்விற்கு நன்மை செய்யும் ஆதலால் இந்நூல் இவ்வாறு அழைக்கப் படுகிறது.

Sunday, 26 November 2017

சிற்றிலக்கியம்

தமிழில் தூது, உலா, பிள்ளைத்தமிழ், கலம்பகம் முதலியவற்றைச் சிற்றிலக்கியம் என்பர். சிற்றிலக்கியம் என்பது கீழ்காணும் அடிப்படைகளைக் கொண்டுள்ளது.
  1. சிற்றிலக்கியம் அளவில் (பாடல் எண்ணிக்கை அல்லது அடிகளின் எண்ணிக்கை) சுருங்கியதாக அமைவது.
  2. அகப்பொருள், அல்லது புறப்பொருளில் ஏதேனும் ஒரு துறையைப் பற்றியதாக அமையும். (கோவை போன்ற சில சிற்றிலக்கியங்கள் பல துறைகளைக் கொண்டு அமைவதும் உண்டு.)
  3. பாடப்பெறும் கடவுள் அல்லது மன்னன் அல்லது வள்ளல் ஆகியோருடைய வாழ்வின் ஒரு சிறு கூறு மட்டுமே விளக்கப்பட்டிருக்கும். எடுத்துக்காட்டாக: உலா இலக்கியம் தலைவன் உலாவரும் காட்சியை மட்டுமே சிறப்பித்துப் பாடப்படுவது.
  4. அறம், பொருள், இன்பம், வீடு எனும் நான்கு உறுதிப் பொருள்களுள் ஏதேனும் ஒன்றைத் தருவதாக அமைவது சிற்றிலக்கியம்.
  5. இவ்வகையில் தூது, உலா, பிள்ளைத்தமிழ், கலம்பகம், கோவை, குறவஞ்சி போன்ற பலவகை இலக்கியங்கள் சிற்றிலக்கியம் என்ற வகைமையுள் அடங்கும்.[1]
பிரபந்தம் என்பது இலக்கிய வகைகள் பலவற்றைக் குறிக்கும் பொதுப்பெயர் ஆகும். சமஸ்கிருதத்தில் பிரபந்தம்என்னும் சொல், கட்டப்பட்டது எனப் பொருள்படும். தமிழில் சிற்றிலக்கியங்கள் எனப்படுபவை வடமொழியில் பிரபந்தங்கள் எனப்படுகின்றன.

Saturday, 25 November 2017

அகப்பொருள் திணைகள்

அகப்பொருள் திணைகள்
  1. குறிஞ்சித்திணை
  2. முல்லைத்திணை
  3. மருதத்திணை
  4. நெய்தல்திணை
  5. பாலைத்திணை
இந்த ஐந்து திணைகளுக்கும் உரிய அகப்பொருள் இலக்கணம் மூன்று வகைப்படும். அவை,
  1. முதற்பொருள்
  2. கருப்பொருள்
  3. உரிப்பொருள்
ஆகியன ஆகும்.
முதற்பொருள்
தமிழ் இலக்கணத்தில் முதற்பொருள் என்பது சொற்களினால் உணரப்படும் மூன்று பொருள் வகைகளுள் ஒன்றாகும்.கருப்பொருள், உரிப்பொருள் என்பன ஏனைய இரண்டு வகைகள். முதற்பொருள் இருவகைப்படும். இவை காலம், நிலம் என இருவகைப்படும். “நிலம்” என்பதனுள் நிலம், நீர், தீ, காற்று, ஆகாயம் என்னும் ஐந்தும், “காலம்” என்பதனுள் மாத்திரை, நாழிகை, யாமம், பொழுது, நாள், பக்கம், திங்கள், இருது, அநயம், ஆண்டு, உகம் என்னும் பலவகையானவையும் அடங்கும்

Friday, 24 November 2017

திரு.வி.க.தமிழ்ப்பணி

தமிழ் தென்றல் திரு.வி.க
பிறப்பு
      கலியாணசுந்தரனார் காஞ்சிபுரம் மாவட்டதில் துள்ளம் என்னும் சிற்றுரில் 1883ஆம் ஆண்டு பிறந்தார். இவரது தந்தையர் விருத்தாச்சலம் திருவாரூரைச் சார்ந்தவர் . இதனால் திரு.வி.க என்று அழைக்கப்படுகிறார்
எழுதிய நூல்கள்
      முருகன் அருள் வேட்டல் , கிருஸ்து அருள் வேட்டல், திருமால் அருள் வேட்டல்,புதுமை வேட்டல் போன்ற செய்யுள் நூல்களை இயற்றியுள்ளார்.
      இந்தியாவும் விடுதலையும், பெண்ணின் பெருமை அல்லது வாழ்க்கை  துணை, முருகன் அல்லது அழகு , நாயன்மார் வரலாறு எனப் பல நூல்களை இயற்றியுள்ளார்
தமிழுக்கு செய்த சிறப்பு
       தமிழையும் தமிழகத்தையும் மற்றவர்கள் பெருமையாக என்னும் அளவிற்குக் காட்டியவர். சிறந்த தொழில்சங்கவாதியாகவும் தேசியப்பற்றுமிக்கவராகவும்  விளங்கியவர் .
வாழ்வின் குறிக்கோள்
       'என்கடன் பணி செய்து கிடப்பதே' என்று வாழ்நாள் முழுவதும் தொண்டாற்றினார்.

Thursday, 23 November 2017

கடல் பயணம்

பழந்தமிழர்களுடைய கடல்வணிகம் குறித்து இரு வருடங்களுக்கு முன் எழுதிய முதல் கட்டுரையில் பண்டைய காலம் முதல் கி.மு. 7ஆம் நூற்றாண்டுவரையான பழந்தமிழர்களின் கடல்வணிகம் குறித்து எழுதியிருந்தேன். கி.மு. 7ஆம் நூற்றாண்டு முதல் கி.பி. 3ஆம் நூற்றாண்டு வரையான காலகட்டத்தில் பழந்தமிழர் கடல்வணிகம் குறித்து மூன்று கட்டுரைகள் எழுதியுள்ளேன். அதில் இது முதல் கட்டுரையாகும். இரண்டாவது கட்டுரை தமிழக வணிகத்தின் அளவீடைத் தெரிந்துகொள்ள நாணயங்கள் குறித்தும் வட இந்திய வணிகம் குறித்துமான கட்டுரையும், மூன்றாவது கட்டுரை சங்க இலக்கியத்தில் கடல்வணிகம் குறித்த கட்டுரையும் ஆகும்.
“தங்களின் பண்டைய உருவாக்கமான சொந்தக் கப்பல்களைக் கொண்டு தமிழர்களின் கடல்வணிகம் பாதுகாப்பான முறையில் மிகச்சிறந்த வளர்ச்சி பெற்றிருந்ததோடு, இந்த வணிகத்தோடு கருத்துப்பரிமாற்றங்களும் தென்னிந்தியாவில் மட்டுமில்லாது, பாரசீக வளைகுடா, அரேபியக்கடற்கரை, ஆப்ரிக்க ஆகிய நாடுகளோடு தொடர்ந்து நடத்தப்பட்டும் பராமரிக்கப்பட்டும் வந்தன. புத்தமத, பிராமண நூல்கள் இந்த கடல்வணிகத்தின் காலத்தை கி.மு. 5ஆம் நூற்றாண்டு எனச்சொல்வதற்கு, இந்நூல்கள் வட ஆரியர்களுடையது என்பதும், உள்நாட்டுப் பகுதியைச் சேர்ந்தவர்களது என்பதும், தமிழர்கள் நன்கு வளர்ச்சியடைந்த பின்னரே இவர்கள் தென்னிந்தியாவிற்கு வந்தனர் என்பதும் தான் காரணமாகும். ஆனால் இக்கடல்வணிகத்தின் காலம் மிக முந்தையது ஆகும்(

Wednesday, 22 November 2017

பெயர்ச்சொல்

பெயர்ச்சொல் என்பது ஒன்றன் பெயரை உணர்த்தும் சொல் ஆகும்.[1] பொருள், இடம், காலம், சினை, குணம், தொழில் என்னும் ஆறின் அடிப்படையில் பெயர்ச்சொற்கள் தோன்றும். ஆதலால் பெயர்ச்சொல்
பொருட் பெயர்
இடப் பெயர்
காலப் பெயர்
சினைப் பெயர்
பண்புப் பெயர்
தொழிற் பெயர்
என்று ஆறு வகைப்படும்.[2] பொருள், இடம், காலம், சினை, குணம், தொழில் என்பவற்றைப் பொருளாதி ஆறு என்றும், பொருள் முதலாறு என்றும் கூறுவர்.
"பெயர்ச்சொல் திணை, பால், எண், இடம் ஆகியவற்றை உணர்த்தி வரும்; வேற்றுமை ஏற்கும், காலம் காட்டாது."[3]

Tuesday, 21 November 2017

உலகளாவிய தமிழர்

தமிழர் என்பவர் தமிழைத் தாய்மொழியாகக் கொண்டவர்களாவர்.[14] மிகப் பழைய தமிழ்ச் சமுதாயங்கள் தென்னிந்தியா, இலங்கையைச் சேர்ந்தவைகள் ஆகும். உலகம் முழுவதிலும் இன்று தமிழர் பரவி வாழ்ந்தாலும் அவர்களது தாயகம் தமிழ்நாடும், தமிழீழமுமே ஆகும். 1800-களில் பிரித்தானியக் குடியேற்றவாத அரசால் பெருந்தோட்டப் பயிர்ச் செய்கைக்காகத் தென்னிந்தியாவிலிருந்தும், இலங்கையின் வடபகுதியிலிருந்தும் குறிப்பிடத்தக்க அளவில் தமிழர்கள் மலேசியா, சிங்கப்பூர், பர்மா போன்ற நாடுகளில் குடியேற்றப்பட்டார்கள். இவ்வாறே மொரிசியசு, மடகாசுகர், தென்னாபிரிக்கா போன்ற ஆபிரிக்க நாடுகள் பலவற்றிலும் தமிழர்கள் குடியேறியுள்ளார்கள். 20-ஆம் நூற்றாண்டில் தொழில் வாய்ப்புகள் பெற்று நடு ஆசிய நாடுகளுக்குச் சென்று வசிக்கின்றனர். 1950-களின் பின்னர் தமிழர் தொழில் வல்லுனர்களாக ஐரோப்பிய அமெரிக்க நாடுகளுக்குப் புலம்பெயர்ந்தனர். 1983-இல் இலங்கை இனக்கலவரங்களில் பாதிக்கப்பட்டுப் பெருமளவு ஈழத்தமிழர்கள் அசுத்திரேலியா, கனடா, அமெரிக்கா போன்ற நாடுகளிலும், ஐரோப்பிய நாடுகளான பிரித்தானியா, பிரான்சு, யேர்மனி, சுவிற்சர்லாந்து, டென்மார்க், நோர்வே போன்ற நாடுகளிலும் சென்று வாழ்கிறார்கள். உலகில் 70 மில்லியன் மக்கள் தமிழைத் தாய் மொழியாகவும், மேலும் 9 மில்லியன் மக்கள் தமிழை இரண்டாம் மொழியாகவும் பயன்படுத்துவதாகக் கணக்கிடப்பட்டுள்ளது.[1]

Monday, 20 November 2017

இயல்பு வழக்கு

ஒரு பொருளுக்கு அமைந்துள்ள இயல்பான சொல்லால் அப்பொருளை வழங்குவது இயல்பு வழக்கு எனப்படும். இது
இலக்கணம் உடையது
இலக்கணப்போலி
மரூஉ அல்லது மரூஉ மொழி
என மூவகைப்படும்.
1. இலக்கணம் உடையது தொகு
இலக்கண நெறிப்படி முறையாக வரும் வழக்கு இலக்கணம் உடையது எனப்படும். சான்று:
நிலம், நீர், தீ, வளி, வெளி, மண், மலை. முதலியன.
2. இலக்கணப்போலி தொகு
இலக்கணம் இல்லாததாயினும் இலக்கணம் உடையதைப் போல சான்றோர்களால் தொன்று தொட்டு வழங்கப்படுவது இலக்கணப் போலி எனப்படும். சான்று:
இல்முன் → முன்றில்
கால்வாய் → வாய்க்கால்
கோவில் → கோயில்
நகர்ப்புறம் → புறநகர்
மிஞிறு → ஞிமிறு
கண்மீ → மீகண்
தசை → சதை
கொம்பு நுனி → நுனிக் கொம்பு
தடித்த எழுத்தில் உள்ளவை சரியான சொற்களின் இலக்கணப்போலிகள் ஆகும். நிலைமொழிகள் முன் பின்னாக மாறிவருதல் போலி. இவ்வாறு பயின்று வருதல் பிழை இல்லை என்று கருதப்படுகிறது.
இலக்கணப் போலி 1.முதற்போலி 2. இடைப் போலி 3.கடைப்போலி என மூவகைப்படும் சான்று
1.முதற்போலி -  மஞ்சு -மைஞ்சு
2. இடைப் போலி - அரசன் - அரைசன்
3.கடைப்போலி - அறம் -அறன்
3. மரூஉ தொகு
தொன்று தொட்டு வழங்கி வருதல் மட்டுமின்றி, இடையில் சில எழுத்துகள் தோன்றியும் திரிந்தும் கெட்டும் இலக்கணம் சிதைந்து, தானே மருவி (மாறி) வழங்குவது மரூஉ என வழங்கப்படும். சான்று:
அருமருந்தன்ன → அருமந்த
தொண்டைமாநாடு → தொண்டைநாடு
தெற்குள்ளது → தெனாது
மலையமானாடு → மலாடு
பொழுது → போது
வாயில் → வாசல்
குளவாம்பல் → குளாம்பல்
உறையூர் → உறந்தை
கும்பகோணம் → குடந்தை
தஞ்சாவூர் → தஞ்சை
திருச்சிராப்பள்ளி → திருச்சி
கோயம்புத்தூர் → கோவை
இவ்வாறுசிதைந்து வருவது மரூஉ எனப்படும்.

Sunday, 19 November 2017

கலிங்கத்துப்பரணி

கலிங்கத்துப்பரணி
கலிங்கத்துப்பரணி , பரணி எனப்படும்
தமிழ்ச் சிற்றிலக்கிய வகையைச் சேர்ந்த ஒரு நூல்.
குலோத்துங்கன் என்னும் சோழ மன்னனைப்
பாட்டுடைத்தலைவனாகக்
கொண்டது. அனந்தவன்மன்
என்னும் வட கலிங்க மன்னன்
திறை கொடாமலிருந்த பிழையின்
காரணமாக முதலாம் குலோத்துங்க
சோழனின் படைத்தலைவனும்
அமைச்சனுமாயினாயிருந்த கருணாகரத்
தொண்டைமான் கி.பி. 1112 ஆம்
ஆண்டில் போரில் வென்ற
செய்தியே நூற்பொருள். இது
செயங்கொண்டார் என்னும்
புலவரால் இயற்றப்பட்டது.
இவர்
தீபங்குடியைச் சேர்ந்த அருகர் ஆவார்.
இந்நூலின் காப்புச் செய்யுளால்
இவர் சைவ சமயத்தைச் சார்ந்தவர் என
அறியலாம்.

Saturday, 18 November 2017

பெயர்ச்சொல்

பெயர்ச்சொல் என்பது ஒன்றன் பெயரை உணர்த்தும் சொல் ஆகும். பொருள், இடம், காலம், சினை, குணம், தொழில் என்னும் ஆறின் அடிப்படையில் பெயர்ச்சொற்கள் தோன்றும். ஆதலால் பெயர்ச்சொல்
1. பொருட் பெயர்
2. இடப் பெயர்
3. காலப் பெயர்
4. சினைப் பெயர்
5. பண்புப் பெயர்
6. தொழிற் பெயர்
என்று ஆறு வகைப்படும். பொருள், இடம், காலம், சினை, குணம், தொழில் என்பவற்றைப் பொருளாதி ஆறு என்றும், பொருள் முதலாறு என்றும் கூறுவர்.
நன்னூல் விளக்கம்
'இடுகுறி காரண மரபோடு ஆக்கம்
தொடர்ந்து தொழில்அல காலம் தோற்றா
வேற்றுமைக்கு இடனாய்த் திணைபால் இடத்து ஒன்று
ஏற்பதுவும் பொதுவும் ஆவன பெயரே'- நன்னூல் - 275
எடுத்துக்காட்டுகள்
பொருட்பெயர் : மனிதன், பசு, புத்தகம்
இடப்பெயர் : சென்னை, தமிழகம்
காலப்பெயர் : மணி, நாள், மாதம், ஆண்டு
சினைப்பெயர் : கண், கை, தலை
பண்புப்பெயர் : இனிமை, நீலம், நீளம், சதுரம்
தொழிற்பெயர் : படித்தல், உண்ணல், உறங்குதல்

Friday, 17 November 2017

இன்பம்.சுரதா

சுரதா (நவம்பர் 23, 1921 - ஜூன் 19, 2006) தமிழகக் கவிஞரும் எழுத்தாளரும் ஆவார். கவிஞர் பாரதிதாசனிடம் கொண்ட பற்றுதலால் பாரதிதாசனின் இயற்பெயராகிய சுப்புரத்தினம் என்பதின் அடிப்படையில் தன் பெயரை சுப்புரத்தினதாசன் என்று மாற்றிக்கொண்டார். தன் மாற்றுப்பெயரின் சுருக்கமாக சுரதா என்னும் பெயரில் பல மரபுக்கவிதைத் தொகுப்புகள் தந்தவர். செய்யுள் மரபு மாறாமல் எழுதிவந்த இவர் உவமைகள் தருவதில் தனிப்புகழ் ஈட்டியவர். இதனால் இவரை உவமைக் கவிஞர் என்று சிறப்பித்துக் கூறுவர்

Thursday, 16 November 2017

ஆகுபெயர்

ஆகு பெயர் எனப்படுவது, ஒரு சொல் அதன் பொருளைக் குறிக்காமல் அச்சொல்லோடு தொடர்புடைய வேறு ஒரு பொருளைக் குறிப்பது. ஒன்றினது இயற்பெயர் அதனோடு தொடர்புடைய வேறொன்றுக்கு ஆகி வருவது. பெயர்ச்சொல்லின் ஒரு இயல்பாக வருவது. ஆகுபெயர் எல்லாமே பெயர்ச்சொல். (பெயர்ச்சொல் எல்லாம் ஆகுபெயராகாது.)
எடுத்துக்காட்டுகள் தொகு
நெல் அறுத்தான் - உண்மையில் அறுக்கப்பட்டது கதிர். நெல் என்பது இங்கு ஆகுபெயர் ஆனது.
வெற்றிலை நட்டான் - நடப்பட்டது வெற்றிலைக் கொடி. இங்கு வெற்றிலைக் கொடிக்காக வெற்றிலை ஆகுபெயர் ஆனது.
கண் என்னும் சொல் ஆகுபெயராய்க் கண்ணின் பார்வையை உணர்த்தும்.
பெண் இயலார் எல்லாம் கண்ணின் பொது உண்பர்
நண்ணேன் பரத்த நின் மார்பு [1]
இந்தத் திருக்குறளில் கண்ணால் உண்பர் என்பது கண் பார்வையால் உண்ணுதலை உணர்த்தி நிற்கும் ஆகுபெயர்.

Wednesday, 15 November 2017

திணைமாலை நூற்றைம்பது - பதினெண் கீழ்க்கணக்கு



ஐந்திணை ஒழுக்கங்களைக் கோவையாக அமைத்து மாலை போலத் தந்துள்ளமையால் 'திணைமாலை' என்றும், பாடல் அளவினால் 'திணைமாலை நூற்றைம்பது' என்றும், இந்நூல் பெயர் பெற்றுள்ளது. இந் நூலின் ஆசிரியர் ஏலாதியை இயற்றிய கணிமேதாவியார். 

Tuesday, 14 November 2017

இன்னா நாற்பது

முக்கட் பகவ னடி தொழர் தார்க்கின்னா
பொற்பனை வெள்ளையை1 யுள்ளா தொழுகின்னா
சக்கரத் தானை மறப்பின்னா2 வாங்கின்னா
சத்தியான் றாடொழா தார்க்கு.

(

Monday, 13 November 2017

எழுத்து


முதலெழுத்துகள்
தமிழ் எழுத்துகள் முதலெழுத்து, சார்பெழுத்து என இரண்டு வகையாகப் பிரிக்கப்பட்டுள்ளது. அ முதல் ஔ வரையுள்ள 12 உயிரெழுத்துகளும், ‘க்’ முதல் ‘ன்’ வரையுள்ள 18 மெய்யெழுத்துகளும் ஆகிய முப்பதும் முதலெழுத்துகள் எனப்படும்.
1
2
"எழுத்தெனப் படுவ அகர முதல னகர இறுவாய் முப்பஃ தென்ப" - தொல்காப்பியம்
"உயிரும் உடம்புமாம் முப்பது முதலே" - நன்னூல்
அ, ஆ, இ, ஈ, உ, ஊ, எ, ஏ, ஐ, ஒ, ஓ, ஒள என்ற பன்னிரண்டு எழுத்துகளும் உயிர் எழுத்துகள் ஆகும். இவை தமிழ் மொழிக்கு உயிர் போன்ற எழுத்துகள் ஆகும்.
க், ங், ச், ஞ், ட், ண், த், ந், ப், ம், ய், ர், ல், வ், ழ், ள், ற், ன் என்ற பதினெட்டு எழுத்துகள் மெய் எழுத்துகள் ஆகும். இவை தமிழ் மொழிக்கு மெய் (உடல்) போன்ற எழுத்துகள் ஆகும்.
பன்னிரண்டு உயிர் எழுத்துகளும், பதினெட்டு உடல் (மெய்) எழுத்துகளும் சேர்ந்து மொத்தம் 30 எழுத்துகளும் தமிழ் மொழியின் முதல் எழுத்துகள் எனப்படுகின்றன.

Sunday, 12 November 2017

பேச்சுக்கலை ...

காஷ்மீரில் பாகிஸ்தான் சதிச்செயல்கள் முறியடிப்பு: ராஜ்நாத் சிங் பேச்சு 4 ஆண்டுகளுக்குள் ஏடிஎம்கள் எண்ணிக்கை குறைக்கப்படும்: நிதி ஆயோக் சிஇஓ அமிதாப் கந்த் தகவல்ஒரு மனிதன் வெற்றியாளராக மாற நிறைய பண்புகள் தேவைப்படுகின்றன. மனிதனுடைய நற்பண்புகளே அவனை வெற்றியாளராக உருவாக்குகிறது.  வெற்றியாளராக வேண்டுமென்றால் நல்ல பேச்சுத்திறமை இருக்க வேண்டும். பேச்சு என்பது ஒரு கலையாகும். இது நூல்கள் பல கற்பவர்களுக்கே  அரிய பொக்கிஷமாக அமைகிறது. மேடைப்பேச்சில் நல்ல தமிழைக் கொண்டு மக்களை தன்பால் ஈர்த்தவர்கள் தமிழ்தென்றல் திரு.வி.க. பேரறிஞர்  அண்ணா, வெண்தாடி வேந்தர் தந்தை பெரியார், ரா.பி. சேது பிள்ளை உள்ளிட்டோரை குறிப்பிடலாம் ‘சித்திரமும் கைப்பழக்கம், செந்தமிழும்  நாப்பழக்கம்’ என்பார்கள். ஒரு வாசகம் ஆயினும் திருவாசகமாய் பேச வேண்டும். எதைக் கொட்டினாலும் அள்ளி விடலாம். ஆனால் வார்த்தையைக்  கொட்டினால் அள்ள முடியாது. உலகிலேயே பயங்கரமான ஆயுதம் நாக்குதான். இதனால் தான் நம்முடைய நாக்கை 32 பற்கள் அரண்போல் அமைந்து  24 மணிநேரமும் காவல் காக்கின்றன.
ஒரு பிரச்னைக்கு காரணமாக இருப்பது பேச்சே. அதே பிரச்னைக்கு தீர்வு காணப்படுவதும் பேச்சு மூலமே. எத்தனையோ பிரச்னைகள்  பேச்சுவார்த்தைகள் மூலமே தீர்த்து வைக்கப்படுகின்றன. ஒருவரது கனிவான பேச்சு பகைவரை கூட நட்பு பாராட்ட வைக்கும். பேச்சுத் திறமையினாலே  சிகரத்தை தொட்ட நிறைய சாதனையாளர்கள் உள்ளனர். பேச்சில் சாதாரண பேச்சு, மேடை பேச்சு என இருவகை உண்டு. கடைத்தெருவில் 5  இளைஞர்கள் கூடினால் ஒருவரை வாய் கிழிய பேசி கேலி, கிண்டல் செய்து கலாய்ப்பது உண்டு. அதே இளைஞர்களை மேடையில் ஏற்றி மைக்கை  கொடுத்து நாலு வார்த்தை பேச சொன்னால் கை, கால்கள் எல்லாம் மிருதங்கம் வாசிப்பது போன்று நடுங்கும். எனவே வெறும் பேச்சுக்கும்,  மேடைப்பேச்சுக்கும் நிறைய வேறுபாடு உண்டு. பக்கம்பக்கமாக எழுதி உணர்த்துவதை காட்டிலும் எளியமுறையில் உணர்த்துவதே பேச்சாகும்.


Saturday, 11 November 2017

ஆவணம்

ஆவணப்படுத்தல் அல்லது ஆவணமாக்கம் என்பது ஒன்றைப் பற்றிய அறிவிற்கு தேவையான ஆவணங்களைப்பெறுதல் அல்லது உருவாக்குதல், ஒழுங்கமைத்தல், பாதுகாத்தல், பகிர்ந்தல் போன்ற செயற்பாடுகளைக் குறுக்கிறது. ஆவணங்கள் நூல்கள், சாசனங்கள், ஒலிப் பதிவுகள், நிகழ்படங்கள், படங்கள், வாய்மொழித் தகவல்கள், பொருட்கள் என பல வடிவங்களில் இருக்கலாம்.
பல துறைகளில் ஆவணப்படுத்தல் ஒரு முக்கிய செயற்பாடாக அமைகிறது.
அறிவியலும் தொழினுட்பமும்
தரவுகள், ஆய்வுக் கட்டுரை, ஆய்வேடு
தரவுத்தாள்கள்
காப்புரிமைப் பட்டயம்

Friday, 10 November 2017

திரிகடுகம்

திரிகடுகம் என்பது பதினெண்கீழ்க்கணக்கு நூல்களுள் ஒன்றாகும். இந்நூல் நல்லாதனார் என்னும் புலவரால் இயற்றப்பட்டதாகும். திரிகடுகம் என்பது மூன்று மருந்துப் பொருட்களைக் குறிக்கும். சுக்கு, மிளகு, திப்பிலி என்னும் மூலிகைகள் உடலுக்கு நன்மை செய்வது போல் இந்நூலில் ஒவ்வொரு பாட்டிலும் உள்ள மூன்று கருத்துக்கள் வாழ்விற்கு நன்மை செய்யும் ஆதலால் இந்நூல் இவ்வாறு அழைக்கப் படுகிறது.

Thursday, 9 November 2017

ஏலாதி

ஏலம் ஆதியான ஆறு பொருள்கள் சேர்ந்த ஒரு வகைச் சூர்ணம் 'ஏலாதி' என மருத்துவ நூல்களில் கூறப்பெறும். ஏலம் ஒரு பங்கு, இலவங்கப்பட்டை இரண்டு பங்கு, நாககேசரம் மூன்று பங்கு, மிளகு நாலு பங்கு, திப்பிலி ஐந்து பங்கு, சுக்கு ஆறு பங்கு என்ற அளவுப்படி சேர்த்து இம் மருந்தை ஆக்குவர். ஏலாதி நூலும் ஒவ்வொரு பாடலிலும் ஆறு பொருள்களைப் பெற்று, உயிருக்கு உறு துணையாக அற நெறியை விளக்கி உரைக்கும் ஒப்புமை நீர் மையால் இப் பெயரைப் பெற்றுள்ளது. இந் நூலின் ஆசிரியர் கணிமேதாவியார்.
கடவுள் வாழ்த்து.

Wednesday, 8 November 2017

யாப்பு

யாப்பு என்பதற்குப் புலவர்களால் செய்யப்பெறும் செய்யுள் என்பது பொருள். செய்யுள் இயற்றுதற்குரிய இலக்கணம் யாப்பிலக்கணமாகும்
எழுத்து
அசை
சீர்
ஓரசைச்சீர்
ஈரசைச்சீர்
மூவசைச்சீர்
நாலசைச்சீர்
தளை
ஆசிரியத்தளை
வெண்டளை
கலித்தளை
வஞ்சித்தளை
பாக்களும், தளைகளும்
அடி
தொடை
தொடை விகற்பங்கள்
மோனைத் தொடை
சீர்மோனைகள்
அடிமோனைகள்
இயைபுத் தொடை
எதுகை தொடை
முரண் தொடை
அளபெடைத் தொடை
அந்தாதித் தொடை
இரட்டைத் தொடை
செந்தொடை

Tuesday, 7 November 2017

கெலன் கெல்லர்

புகழ்பெற்ற பேச்சாளராகவும் எழுத்தாளராகவும் விளங்கிய ஹெலன் கெல்லர் என்னும் பெண்மணியிடம் அதிசயிப்பதற்கு ஒன்றுமில்லை, அவரும் இயல்பான மாந்தராக இருந்திருந்தால்! ஆனால் கண்பார்வையற்ற, கேட்கவும் பேசவும் இயலாத ஒரு மாற்றுத் திறனாளி என்பதை அறிந்தால் எத்தனை வியப்பு உண்டாகிறது. அத்தகைய வியக்கத்தக்கப் பெண்மணியின் நினைவு நாளில் அவரைப் பற்றிய இக்கட்டுரையைப் பதித்து அவர் பெருமையை நினைவுகூர்வதில் மிகவும் மகிழ்கிறேன்.
அமெரிக்காவின் அலபாமா மாகாணத்தில் உள்ள துஸ்கும்பியாவில் 1880ஆம் வருடம் ஜூன் 27ஆம் நாள் பிறந்த ஹெலன் ஆடம்ஸ்  கெல்லருக்குப் பிறவியில் குறைகளேதுமில்லை. பதினெட்டு மாதக் குழந்தையாயிருக்கும்போது ஏற்பட்ட மூளைக்காய்ச்சலால் தம் பார்வையை, பேசும்,  கேட்கும் திறனை இழந்தவரை, தம் வாழ்நாளின் இறுதிவரை அயராது அடுத்தவருக்காகப் பாடுபடத் தூண்டியது அவருடைய மனோதிடமாகும். அதற்கு உறுதுணையாயிருந்தவர் அவருக்கு வாய்க்கப்பெற்ற அற்புத ஆசிரியராவார்.
பிள்ளைப் பிராயத்தில் தனது தேவைகளை சரிவர வெளிப்படுத்தத் தெரியாத நிலையில் அவரிடம் முரட்டுத்தனம் மிகுந்திருந்தது. உலகத்தைப் பற்றிய எந்த விவரமும் அறிந்திராத அவரை அமைதிப்படுத்தி அவருள் புதைந்து கிடந்த அற்புத அறிவாற்றலையும், விடாமுயற்சியையும், சாதிக்கும் நெஞ்சுரத்தையும் வெளிக்கொணர்ந்து உலகறியச் செய்த பெருமை அவரது ஆசிரியை ஆன் சல்லிவனையே சாரும்.
1887 ஆம் வருடம் மார்ச் மாதத்தில் ஒரு நாள்! ஹெலன் கெல்லரின் புதிய வாழ்க்கைத் துவங்கப்பெற்ற அந்த நாளை தன் வாழ்வின் மறக்கமுடியாத முக்கியமான நாளாகக் குறிப்பிடுகிறார் ஹெலன். ஆம், தன் வாழ்நாளையே ஹெலனின் வளர்ச்சிக்காக அர்ப்பணித்த ஆசிரியை ஆன் சல்லிவனின் அருமை அறியாது,  மூர்க்கத்துடன் எதிர்கொண்ட நாள்!
ஏழு வயது ஹெலனுக்குப் பாடம் கற்றுத் தர அலெக்ஸாண்டர் கிரகாம் பெல்லால் ஏற்பாடு செய்யப்பட்ட இருபது வயது இளம் ஆசிரியை அவர். பெர்கின்ஸிலிருக்கும் பார்வையற்றோர் பள்ளியில் பணிபுரிந்துகொண்டிருந்த ஆன் சல்லிவனுக்கு பல அறுவை சிகிச்சைகளுக்குப் பின் ஓரளவு மட்டுமே பார்க்கும் திறனிருந்தது. ஆனாலும் அவர் தன் முழு உத்வேகத்தையும் காட்டி, ஹெலன் கெல்லருக்கு வாழும் கலையைக் கற்பித்தார் என்றே சொல்லவேண்டும். மாபெரும் சிரமங்களை எதிர்கொண்டு ஹெலனுக்குப் பாடம் கற்பித்தார். எல்லாக் கதவுகளும் மூடப்பட்ட நிலையிலும் கல்வியின் ஒளிக்கீற்றை ஹெலனின் ஆழ்மனதினுள் அற்புதமாகச் செலுத்தினார். சகிப்புத் தன்மையுடனும், பொறுமையுடனும், தன்னம்பிக்கையும் விடாமுயற்சியும் கொண்டு, ஒரு ஆசிரியர் எவ்வாறு இருக்கவேண்டும் என்பதற்கு பெரும் முன்மாதிரியாய்த் திகழ்ந்தார்.

Monday, 6 November 2017

ஏலாதி

ஏலம் ஆதியான ஆறு பொருள்கள் சேர்ந்த ஒரு வகைச் சூர்ணம் 'ஏலாதி' என மருத்துவ நூல்களில் கூறப்பெறும். ஏலம் ஒரு பங்கு, இலவங்கப்பட்டை இரண்டு பங்கு, நாககேசரம் மூன்று பங்கு, மிளகு நாலு பங்கு, திப்பிலி ஐந்து பங்கு, சுக்கு ஆறு பங்கு என்ற அளவுப்படி சேர்த்து இம் மருந்தை ஆக்குவர். ஏலாதி நூலும் ஒவ்வொரு பாடலிலும் ஆறு பொருள்களைப் பெற்று, உயிருக்கு உறு துணையாக அற நெறியை விளக்கி உரைக்கும் ஒப்புமை நீர் மையால் இப் பெயரைப் பெற்றுள்ளது. இந் நூலின் ஆசிரியர் கணிமேதாவியார்.

Sunday, 5 November 2017

உயர்தனிச் செம்மொழி.

< செம்மொழித் தகுதி>
                           ஒரு மொழிக்கு செம்மொழி என்ற தகுதி அம்மொழியில் இடம் பெற்றிருக்கும் இலக்கியத் தரத்தின் அடிப்படையில்தான் முடிவு செய்யப்படுகிறது. இருப்பினும் செம்மொழி என்பதற்கு அம்மொழியில் இடம் பெற்றிருக்கும் முக்கியமான இரண்டு சிறப்புகள் தேவையாய் இருக்கிறது.
இலக்கியப் படைப்புகள்
கலைப் படைப்புகள்
இந்த இரு படைப்புகளைக் கொண்டே அந்த மொழி செம்மொழிகளாக அறிவிக்கப்படுகின்றன.
இலக்கியப் படைப்புகள்
ஒரு மொழியின் சிறப்பிற்கும் செம்மைக்கும் முதல் அடையாளமாகத் திகழ்வது அம்மொழியின் பழமை வாய்ந்த இலக்கியங்கள்தான். இந்த இலக்கியங்களில் இருக்கும் பழமையுடன் அதில் கருத்துச் செறிவுகளும் இருக்க வேண்டும். ஒரு மொழியின் சிறப்பு அந்த மொழியில் படைக்கப்பட்ட இலக்கியப் படைப்புகள் வழியாகத்தான் அறிய முடிகிறது.
கலைப் படைப்புகள்
ஒரு மொழியின் பழமைக்கு இலக்கியம் சான்றாக இருந்தது என்பதுடன் அந்த மொழி சார்ந்த பகுதிகளில் உருவாக்கப்பட்ட கலைப் படைப்புகள் அந்த மொழியின் பழமையை உணர்த்தும் அடுத்த சான்றாக இருக்க வேண்டும். கலைப் படைப்புகள் என்பது கட்டிடக் கலை , சிற்பக் கலை போன்ற பழமை வாய்ந்த கலைச் சான்றுகளாக இருக்க வேண்டும்
உலகச் செம்மொழிகள்
இன்று உலகில் செம்மொழிகளாகக் கருதப்படும் மொழிகள் 8 ஆக இருக்கின்றன.

Saturday, 4 November 2017

அணி

அணி :
1 . இல்பொருள் உவமையணி :
உலகில் இல்லாத பொருளை ஒன்றனுக்கு உவமையாக்கிக் கூறுவது
இல்பொருள் உவமையணி எனப்படும்.
அன்பகத் தில்லா உயிர்வாழ்க்கை வன்பாற்கண்
வற்றல் மரந்தளிர்த் தற்று – குறள்  78
இக்குறட்பாவைப் படித்துப் பாருங்கள், உள்ளத்தில் அன்பில்லாத
ஒருவர் குடும்ப வாழ்க்கை நடத்துவது என்பது, பாலை நிலத்தில்,
பட்டமரம் தளிர்விட்டு வளர்வது போன்றது.
திருவள்ளுவர், இக்குறட்பாவில் அன்பில்லாதவன் வாழ்க்கை,
பாலைநிலத்தில் பட்டமரம் தளிர்விட்டு வளர்வதற்கு ஒப்பானது என
இல்லாத பொருளை உவமித்துக் கூறுகிறார்.
புலவன், உலகில் இயல்பாக இல்லாத பொருளை இவ்வாறு
உவமையாக்கிக் கூறுவது இல்பொருள் உவமையணி ஆகும்.
2 . வேற்றுப்பொருள் வைப்பணி :
புலவர் தாம் கருதிய பொருளை நிலைநாட்ட, உலகம் அறிந்த
வேறொரு பொருளைச் சான்றுகாட்டிக் கூறும்போது, பொதுப்
பொருளால் சிறப்புப் பொருளையும், சிறப்புப் பொருளால் பொதுப்
பொருளையும் விளக்குவதனை வேற்றுப்பொருள் வைப்பணி என்பர்.

Friday, 3 November 2017

மணிமேகலை கதை சுருக்கம்.

மணிமேகலை கதை சுருக்கம்
கதை சுருக்கம்:
மாதவியின் மகள் மணிமேகலை. அழகும் இளமையும் உடைய மணிமேகலை இந்திர விழாவில் ஆடவருவாள் என்று பூம்புகார் மக்கள் எதிர்பார்த்து நிற்கின்றனர். ஆனால் மாதவியோ தானும் துறவு பூண்டு தன் மகள் மணிமேகலையையும் துறவு நெறிப்படுத்துகிறாள்.
மணிமேகலையைக் காணும் உதயகுமரன் என்ற சோழ இளவரசன் அவள் அழகில் மயங்கிப் பின்தொடர்கிறான். மணிமேகலா தெய்வம் மணிமேகலையை உதயகுமரனிடமிருந்து காப்பாற்றுவதற்காக மணிபல்லவம் என்ற தீவிற்குத் தூக்கிச் சென்று விடுகிறது.
அங்கு மணிமேகலை ‘அமுதசுரபி’ என்ற பாத்திரத்தைப் பெறுகிறாள். அள்ள அள்ளக் குறையாமல் சோறு வந்து கொண்டே இருக்கும் அதிசமயான பாத்திரம் அது. மணிமேகலை அந்தப் பாத்திரத்துடன் வந்து பூம்புகாரில் அறம் செய்கிறாள். உதயகுமரன் மணிமேகலையைத் தொடர்ந்து வருகிறான்.
அவனிடமிருந்து தப்ப மணிமேகலை ‘காயசண்டிகை’ என்ற கந்தருவப் பெண் வடிவம் கொள்கிறாள். இந்நிலையில் காய சண்டிகையின் கணவன் காஞ்சனன் என்பான் தன் மனைவியைத் தேடி வருகிறான். அவன் உதயகுமரன் மேல் சந்தேகம் கொண்டு அவனை வாளால் வெட்டி விடுகின்றான்.

Thursday, 2 November 2017

வழாநிலை

திணை வழாநிலை, பால்வழாநிலை, இடவழாநிலை, காலவழாநிலை, வினாவழாநிலை, விடைவழாநிலை, மரபுவழாநிலை என வழாநிலைகள் ஏழுவகைப்படும்.
1. திணைவழாநிலை தொகு
உயர்திணை, அஃறிணை ஆகிய இரு திணைகளும் மயக்கமின்றி வருவது திணைவழாநிலை ஆகும். உயர்திணை தொடர்ந்த பொருண்முத லாறும் அதனொடு சார்த்தி னத்திணை முடிபின.[1]
சான்று தொகு
1. கண்ணன் நல்லன். 2. யானை கரியது.
2. பால்வழாநிலை தொகு
ஐவகைப்பாலும் மயக்கமின்றி எழுதுவதும் பேசுவதும் பால்வழாநிலை ஆகும். அந்தந்தப் பாலுக்குரிய எழுவாய்கள் அந்தந்தப் பாலின் பயனிலையைக் கொண்டு முடீதல் வேண்டும். திணைபால் பொருள்பல விரவின சிறப்பினும் மிகவினு மிழிபினு மொருமுடி பினவே..[2]
டு

Wednesday, 1 November 2017

முத்தொள்ளாயிரம்

இது வெண்பா யாப்பில் எழுதப்பட்ட நூல், இது சேர சோழ பாண்டியர்களின் புகழ் பாடுவது. எந்தக் குறிப்பிட்ட மன்னனையும் இது பாடவில்லை. மூன்று குடியினருக்கும் உரிய கோதை, கிள்ளி, மாறன் முதலான பொதுவான பெயர்களே இதில் இடம் பெற்றுள்ளன. நூல் முழுமையாகக் கிடைக்கவில்லை. புறத்திரட்டு என்னும் தொகுதியில் இருந்து எடுக்கப்பட்ட 108 செய்யுட்களே இன்று முத்தொள்ளாயிரம் என்ற பெயரில் பதிப்பிக்கப்பட்டுள்ளன. இந்நூல் தொல்காப்பியர் குறிப்பிட்ட விருந்து என்னும் வகையைச் சாரும்.
பெயர்க்காரணம்
இந்நூலின் பெயர் இருவகைகளில் விளக்கப்படுகிறது. மூன்று வேந்தர்களையும் பற்றிய 900 பாடல்கள் கொண்டது என்பது ஒரு சாரார் கருத்து. மூவேந்தருள் ஒவ்வொருவரையும் தனித்தனியே தொள்ளாயிரம் பாடல்களில் புகழும் நூல் இது என்பது இன்னொரு சாரார் கருத்து.