Thursday, 30 November 2017

சோதனையின் வகைகள்

அடைவுச் சோதனைகள் இரண்டு வகைப்படும். அவையாவன: ஆசிரியரால் உருவாக்கப்பட்ட அடைவு சோதனை மற்றும் தரப்படுத்தபட்ட அடைவுச் சோதனை என்பனவாகும்.
ஆசிரியரால் உருவாக்கப்பட்ட அடைவுச் சோதனை தொகு
வகுப்பறையில் கற்பிக்கப்பட்ட பாடப்பொருள்களை மட்டும் கவனத்தில் கொண்டு ஆசிரியர்கள் வினாக்களைப் பயன்படுத்துவர். இவ்வினாக்கள் கட்டுரை வினாவாகவோ அல்லது சிறு விடை வினாவாகவோ இருக்கும். நம்பகத்தன்மை, ஏற்புடைமை ஆகிய சிறப்பியல்புகளைக் கொண்டதாகவோ அல்லது இல்லாமலோ இருக்கும். இதைத் தரப்படுத்தபடாத அடைவுச்சோதனை என்றும் அழைக்கப்படும்.
தரப்படுத்தபட்ட அடைவுச் சோதனை தொகு
வகுப்பறையில் மட்டுமல்லாது எங்கு வேண்டுமானாலும் இத்தகைய சோதனைகளைப் பயன்படுத்தலாம். இச்சோதனைகள் நன்கு உருவாக்கப்பட்டவை. ஏற்புடைமை, நம்பகத்தன்மை ஆகிய சிறப்பியல்புகளைக் கொண்டதாக இருக்கும். இத்தகைய அடைவுச் சோதனைகள் ஒரு பள்ளி மாணவர்களுக்கு மட்டுமின்றி அனைத்து மாணவர்களுக்கும் பொருத்தமானதாக அமையும்.
==அடைவு சோதனையை உருவாக்குதல்== வகுப்பறைச் சூழலைச் சிறந்ததாக அமைக்க ஆசிரியர் அடைவு சோதனையை அமைப்பதிலும்,தரப்படுத்துவதிலும் உள்ள முறைகளை அறிந்து கொள்ள வேண்டும். சோதனையை அமைப்பதும்,தரப்படுத்துவதும் கீழ்க்கண்ட படிநிலைகளைக் கொண்டது.

No comments:

Post a Comment