முதலெழுத்துகள்
தமிழ் எழுத்துகள் முதலெழுத்து, சார்பெழுத்து என இரண்டு வகையாகப் பிரிக்கப்பட்டுள்ளது. அ முதல் ஔ வரையுள்ள 12 உயிரெழுத்துகளும், ‘க்’ முதல் ‘ன்’ வரையுள்ள 18 மெய்யெழுத்துகளும் ஆகிய முப்பதும் முதலெழுத்துகள் எனப்படும்.
1
2
"எழுத்தெனப் படுவ அகர முதல னகர இறுவாய் முப்பஃ தென்ப" - தொல்காப்பியம்
"உயிரும் உடம்புமாம் முப்பது முதலே" - நன்னூல்
அ, ஆ, இ, ஈ, உ, ஊ, எ, ஏ, ஐ, ஒ, ஓ, ஒள என்ற பன்னிரண்டு எழுத்துகளும் உயிர் எழுத்துகள் ஆகும். இவை தமிழ் மொழிக்கு உயிர் போன்ற எழுத்துகள் ஆகும்.

க், ங், ச், ஞ், ட், ண், த், ந், ப், ம், ய், ர், ல், வ், ழ், ள், ற், ன் என்ற பதினெட்டு எழுத்துகள் மெய் எழுத்துகள் ஆகும். இவை தமிழ் மொழிக்கு மெய் (உடல்) போன்ற எழுத்துகள் ஆகும்.
பன்னிரண்டு உயிர் எழுத்துகளும், பதினெட்டு உடல் (மெய்) எழுத்துகளும் சேர்ந்து மொத்தம் 30 எழுத்துகளும் தமிழ் மொழியின் முதல் எழுத்துகள் எனப்படுகின்றன.
No comments:
Post a Comment