Saturday, 4 November 2017

அணி

அணி :
1 . இல்பொருள் உவமையணி :
உலகில் இல்லாத பொருளை ஒன்றனுக்கு உவமையாக்கிக் கூறுவது
இல்பொருள் உவமையணி எனப்படும்.
அன்பகத் தில்லா உயிர்வாழ்க்கை வன்பாற்கண்
வற்றல் மரந்தளிர்த் தற்று – குறள்  78
இக்குறட்பாவைப் படித்துப் பாருங்கள், உள்ளத்தில் அன்பில்லாத
ஒருவர் குடும்ப வாழ்க்கை நடத்துவது என்பது, பாலை நிலத்தில்,
பட்டமரம் தளிர்விட்டு வளர்வது போன்றது.
திருவள்ளுவர், இக்குறட்பாவில் அன்பில்லாதவன் வாழ்க்கை,
பாலைநிலத்தில் பட்டமரம் தளிர்விட்டு வளர்வதற்கு ஒப்பானது என
இல்லாத பொருளை உவமித்துக் கூறுகிறார்.
புலவன், உலகில் இயல்பாக இல்லாத பொருளை இவ்வாறு
உவமையாக்கிக் கூறுவது இல்பொருள் உவமையணி ஆகும்.
2 . வேற்றுப்பொருள் வைப்பணி :
புலவர் தாம் கருதிய பொருளை நிலைநாட்ட, உலகம் அறிந்த
வேறொரு பொருளைச் சான்றுகாட்டிக் கூறும்போது, பொதுப்
பொருளால் சிறப்புப் பொருளையும், சிறப்புப் பொருளால் பொதுப்
பொருளையும் விளக்குவதனை வேற்றுப்பொருள் வைப்பணி என்பர்.

No comments:

Post a Comment