பழந்தமிழர்களுடைய கடல்வணிகம் குறித்து இரு வருடங்களுக்கு முன் எழுதிய முதல் கட்டுரையில் பண்டைய காலம் முதல் கி.மு. 7ஆம் நூற்றாண்டுவரையான பழந்தமிழர்களின் கடல்வணிகம் குறித்து எழுதியிருந்தேன். கி.மு. 7ஆம் நூற்றாண்டு முதல் கி.பி. 3ஆம் நூற்றாண்டு வரையான காலகட்டத்தில் பழந்தமிழர் கடல்வணிகம் குறித்து மூன்று கட்டுரைகள் எழுதியுள்ளேன். அதில் இது முதல் கட்டுரையாகும். இரண்டாவது கட்டுரை தமிழக வணிகத்தின் அளவீடைத் தெரிந்துகொள்ள நாணயங்கள் குறித்தும் வட இந்திய வணிகம் குறித்துமான கட்டுரையும், மூன்றாவது கட்டுரை சங்க இலக்கியத்தில் கடல்வணிகம் குறித்த கட்டுரையும் ஆகும்.
“தங்களின் பண்டைய உருவாக்கமான சொந்தக் கப்பல்களைக் கொண்டு தமிழர்களின் கடல்வணிகம் பாதுகாப்பான முறையில் மிகச்சிறந்த வளர்ச்சி பெற்றிருந்ததோடு, இந்த வணிகத்தோடு கருத்துப்பரிமாற்றங்களும் தென்னிந்தியாவில் மட்டுமில்லாது, பாரசீக வளைகுடா, அரேபியக்கடற்கரை, ஆப்ரிக்க ஆகிய நாடுகளோடு தொடர்ந்து நடத்தப்பட்டும் பராமரிக்கப்பட்டும் வந்தன. புத்தமத, பிராமண நூல்கள் இந்த கடல்வணிகத்தின் காலத்தை கி.மு. 5ஆம் நூற்றாண்டு எனச்சொல்வதற்கு, இந்நூல்கள் வட ஆரியர்களுடையது என்பதும், உள்நாட்டுப் பகுதியைச் சேர்ந்தவர்களது என்பதும், தமிழர்கள் நன்கு வளர்ச்சியடைந்த பின்னரே இவர்கள் தென்னிந்தியாவிற்கு வந்தனர் என்பதும் தான் காரணமாகும். ஆனால் இக்கடல்வணிகத்தின் காலம் மிக முந்தையது ஆகும்(
No comments:
Post a Comment