காஷ்மீரில் பாகிஸ்தான் சதிச்செயல்கள் முறியடிப்பு: ராஜ்நாத் சிங் பேச்சு 4 ஆண்டுகளுக்குள் ஏடிஎம்கள் எண்ணிக்கை குறைக்கப்படும்: நிதி ஆயோக் சிஇஓ அமிதாப் கந்த் தகவல்ஒரு மனிதன் வெற்றியாளராக மாற நிறைய பண்புகள் தேவைப்படுகின்றன. மனிதனுடைய நற்பண்புகளே அவனை வெற்றியாளராக உருவாக்குகிறது. வெற்றியாளராக வேண்டுமென்றால் நல்ல பேச்சுத்திறமை இருக்க வேண்டும். பேச்சு என்பது ஒரு கலையாகும். இது நூல்கள் பல கற்பவர்களுக்கே அரிய பொக்கிஷமாக அமைகிறது. மேடைப்பேச்சில் நல்ல தமிழைக் கொண்டு மக்களை தன்பால் ஈர்த்தவர்கள் தமிழ்தென்றல் திரு.வி.க. பேரறிஞர் அண்ணா, வெண்தாடி வேந்தர் தந்தை பெரியார், ரா.பி. சேது பிள்ளை உள்ளிட்டோரை குறிப்பிடலாம் ‘சித்திரமும் கைப்பழக்கம், செந்தமிழும் நாப்பழக்கம்’ என்பார்கள். ஒரு வாசகம் ஆயினும் திருவாசகமாய் பேச வேண்டும். எதைக் கொட்டினாலும் அள்ளி விடலாம். ஆனால் வார்த்தையைக் கொட்டினால் அள்ள முடியாது. உலகிலேயே பயங்கரமான ஆயுதம் நாக்குதான். இதனால் தான் நம்முடைய நாக்கை 32 பற்கள் அரண்போல் அமைந்து 24 மணிநேரமும் காவல் காக்கின்றன.
ஒரு பிரச்னைக்கு காரணமாக இருப்பது பேச்சே. அதே பிரச்னைக்கு தீர்வு காணப்படுவதும் பேச்சு மூலமே. எத்தனையோ பிரச்னைகள் பேச்சுவார்த்தைகள் மூலமே தீர்த்து வைக்கப்படுகின்றன. ஒருவரது கனிவான பேச்சு பகைவரை கூட நட்பு பாராட்ட வைக்கும். பேச்சுத் திறமையினாலே சிகரத்தை தொட்ட நிறைய சாதனையாளர்கள் உள்ளனர். பேச்சில் சாதாரண பேச்சு, மேடை பேச்சு என இருவகை உண்டு. கடைத்தெருவில் 5 இளைஞர்கள் கூடினால் ஒருவரை வாய் கிழிய பேசி கேலி, கிண்டல் செய்து கலாய்ப்பது உண்டு. அதே இளைஞர்களை மேடையில் ஏற்றி மைக்கை கொடுத்து நாலு வார்த்தை பேச சொன்னால் கை, கால்கள் எல்லாம் மிருதங்கம் வாசிப்பது போன்று நடுங்கும். எனவே வெறும் பேச்சுக்கும், மேடைப்பேச்சுக்கும் நிறைய வேறுபாடு உண்டு. பக்கம்பக்கமாக எழுதி உணர்த்துவதை காட்டிலும் எளியமுறையில் உணர்த்துவதே பேச்சாகும்.
No comments:
Post a Comment