அகப்பொருள் திணைகள்
- குறிஞ்சித்திணை
- முல்லைத்திணை
- மருதத்திணை
- நெய்தல்திணை
- பாலைத்திணை
இந்த ஐந்து திணைகளுக்கும் உரிய அகப்பொருள் இலக்கணம் மூன்று வகைப்படும். அவை,
- முதற்பொருள்
- கருப்பொருள்
- உரிப்பொருள்
ஆகியன ஆகும்.
முதற்பொருள்
தமிழ் இலக்கணத்தில் முதற்பொருள் என்பது சொற்களினால் உணரப்படும் மூன்று பொருள் வகைகளுள் ஒன்றாகும்.கருப்பொருள், உரிப்பொருள் என்பன ஏனைய இரண்டு வகைகள். முதற்பொருள் இருவகைப்படும். இவை காலம், நிலம் என இருவகைப்படும். “நிலம்” என்பதனுள் நிலம், நீர், தீ, காற்று, ஆகாயம் என்னும் ஐந்தும், “காலம்” என்பதனுள் மாத்திரை, நாழிகை, யாமம், பொழுது, நாள், பக்கம், திங்கள், இருது, அநயம், ஆண்டு, உகம் என்னும் பலவகையானவையும் அடங்கும்
No comments:
Post a Comment